அத்தியாயம் - 30

287 19 0
                                    


உண்மைகளை மறைக்க தான் முடியுமே தவிர, அது என்றோ ஒருநாள் உலகத்திற்கு வெளிச்சமாவதை யாராலும் தடுக்க முடியாது.

இங்கும் அதே தான்! அக்னி, என்னதான் சாணக்கியனிடம் தான் இயல்பு போல் காட்டிக்கொண்டாலும், அவள் வாயாலே அவள் உண்மை உரைப்பாலென அவள் அறியவாய்ப்பில்லை.

அதை எல்லாம் ஏற்கும் சக்தி சாணக்கியனுக்கும் வேண்டும், வேறு வழியில்லை அதை அவன் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். 

"அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்
மறு பிறவி வேண்டுமா..."

அவர்களின் சூழ்நிலைக்கேற்ப பாடல் ஒலித்துக்கொண்டிருப்பதாகவே சாணக்கியனுக்கு தோன்றியது.
அக்னி மீது சாணக்கியனுக்கு ஏற்பட அதிருப்தி காரணமாக அவளுடன் மருந்துக்கும் அவன் பேசுவதில்லை.

'காதல் என்று பொய் சொல்லி அவள் எதை தன்னிடம் சாதிக்க பார்க்கிறாள்? அப்படி தன்னிடம் அவள் அடைய நினைக்க என்ன உள்ளது? முன்பாவது வக்கீல், லட்சத்தில் சில சமயம் சம்பளம் வரும், ஆனால் அக்னியோ கோடியில் புரளுபவள், தனது வருமானம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை, இதில் தான் இப்போது சாதாரண பாட்டு வாத்தியார் வேறு. அதோடு அக்னியிடம் மோதும் அளவுக்கு தான் அவளுக்கு நிகரான ஒருவன் இல்லை! அப்படியிருக்க என்ன தான் எதிர்பார்க்கிறாள் இந்த பேதைப்பெண்?', என கோபம், ஏமாற்றம், வலி என ஒருங்கிணைந்த உணர்வில், இந்த இரு நாட்களாக அவன் படாத பாடு பட்டுவிட்டான்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now