அத்தியாயம் - 44

243 14 2
                                    


கோச் சிவா கிளம்பவும், சற்று நேரத்திலே, அனோகி கல்லூரி முடித்து வீடு வந்திருந்தாள்.

அவளை காணவென அறைக்குள் வந்தாள் அக்னி. மித்ரனது இறப்பிற்குப்பின்னர் தனிமையையே துணையாக்கிக்கொண்டாள்.

அனோகியாலும் அவளிடம் பேச முடியவில்லை. அத்தனை இறுக்கம்! நீண்ட நாள் கழித்து தானே அக்னி முன்வந்து பேசுவது இன்றுதான்.

"வா அகி!", அனோகி வரவேற்க, அக்னி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தனது விரல்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை கேள்வியோடு பார்த்தவள், "என்ன அகி அக்கா! எதாவது பேசனுமா?", என்றாள் நேரடியாக.

"அனு!", என்றவள் கோச் சிவா பேசிய அனைத்தும் கூறி முடிக்கையில் கண்ணீர் சிந்திவிட்டாள். அவளை கவலையாக பார்த்தவள் ஆதரவாக கைப்பற்றிக்கொள்ள, அக்னி தன்னை நிதானித்துக்கொண்டாள்.

"அப்பா, மித்து... இவங்க ரெண்டுபேரும்
இருந்தப்போ எனக்கு அடுத்த அடி எடுத்து வைக்க தயக்கம் வந்ததே இல்ல. இப்போ தடுமாற்றமா இருக்கு அனு. என்னால முடியல.", என்றாள் தோய்ந்த குரலில்.

"நீ இவ்ளோ வீக்கா அகி? என் பேச்சால செயலால நான் முதிர்ச்சியா தெரியலாம், ஆனா என்னோட பலமே நீதான், நீ இப்டி உடையலாமா?

இப்போ என்ன? நமக்கான சப்போர்ட் அப்பா, மாமா ரெண்டுபேருமே கூட இல்லை. மத்தபடி அவங்களோட ப்ளசிங்ஸ் நமக்கு தான் இருக்கு.", என்றவளை வெற்றுப்பார்வை பார்த்தாள்.

"உனக்கு புரியல அனு. அப்பா போனப்போ எனக்கு யாருமே கண்ணுக்கு தெரியல. ஆனா மித்ரன் போனதும் நான் குருட்டு பார்வையோட வாழ்ற மாதிரி இருக்கு. அப்பாவோட வெறுமையே தெரியாத அளவுக்கு அவ்ளோ அக்கறையா அன்பா பாத்துக்கிட்டேன்.

அவன் பார்வையில காதல் இருக்கும், ஆனா அதைத்தாண்டி வேறெந்த தப்பான நோக்கமும் இருக்காது. அவனோட நிழல் கூட எனக்கு தைரியம் தான். அப்படிபட்டவன் இல்லைங்கிறத என்னால தாங்க முடியல.

இந்த வீட்டுக்கு வர முதல நான் எவ்ளோ தயங்கினேன்! மித்து என்ன மொத்தமா மாத்தினான். இவ்ளோ ஏன்? இந்த வீட்ட என் பெயர்ல எழுதியிருக்கான். ஆனா என்னால இங்க அவன் இல்லாம வாழ முடியல. அவன் போயிருக்கூடாது அனு!", என தலையை பிடித்துக்டொண்டாள்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now