அத்தியாயம் - 14

262 16 0
                                    

ராம்குமார் அகியிடம் கூறியபடியே, முனீஷின் இடத்திற்கு பதிலாக, கேண்டீன் ஆர்டரை வேறு ஒருவர் எடுத்து, சிறப்பாக நடத்த ஆரம்பித்திருந்தார். ஆரோக்கியமாகவும், தரமாகவும் உணவு வழங்கப்பட்டது! மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அன்று காலை வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்த அக்னியின் காதில் எதிர்வீட்டில் கத்தி பேசிக்கொண்டிருப்பது, அந்த அதிகாலை வேளையில் நன்றாகவே விழுந்தது. முதலில் அதை கண்டுக்காதவள், ஒரு ஆணின் குரல் கேட்கவும், அவனா இருக்குமோ என்ற ஒருவித ஆர்வத்தில் கவனிக்க ஆரம்பித்தாள்.

"அகி! நாளைக்கு வர லீவ் தானேடா. அதுக்குள்ள ஏன் கிளம்பி ரெடியாகி நிக்குற? அம்மா, உனக்கு பிடிச்சதெல்லாம் இன்னிக்கி சமைக்கலாம் நினைச்சு இருந்தேன். நீ என்னடான்னா சொல்றது கேட்கமாட்டிக்கிறியே!", ஜெயந்தி சோகமாக முடித்தார்.

"ம்மா! கொஞ்சம் வேலை அதான் இவ்ளோ சீக்கிரம் கிளம்புறேன்."

"அப்டி என்ன வேலை, விடிஞ்சும் விடியாத காலையில. அதுவும் இவ்ளோ சீக்கிரம் கிளம்புற அளவுக்கு.", அவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கேட்டார்.

அவன் தலையை சொறிந்தபடி அவஸ்த்தையாக தனது பெரியப்பா மூர்த்தியை கண்டு கண்களாலே கெஞ்சிட, அவர் புன்னகைத்தார்.
இதை கவனித்த ஜெயந்தி, "என்னடா பதில காணோம்?", என்றார்.

"அவனோட காதலிய பாக்க போறான் ஜெயாம்மா!", என்றதும் ஜெயந்தி அதிர்ந்தாரோ இல்லையோ, காரணமின்றி அதை கேட்ட நமது அக்னி தேவிக்கு பெரும் அதிர்ச்சி. மனதில் ஒருவித கணம் கூடியது போல் இருந்தது, அவள் போட்டுக்கொண்டிருந்த சிக்கு கோலாம் போல் அவளது மனமும் அவளது எண்ணப்போக்கை நினைத்து, எதையும் யோசிக்க முடியாமல் சிக்கி தவித்தது.

இங்கு ஜெயந்தியோ, "யாருடா அந்த பொண்ணு?", என்றது வரை தான் அக்னிக்கு தெளிவாக கேட்டது. ஐந்து மணிக்கு வீதியில் பொறுத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் சாமி பாடல் ஒலிக்க ஆரம்பித்திருக்க, அந்த பெரும் சப்தத்தில், வேற எதுவும் கேட்கவில்லை.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now