அத்தியாயம் - 15

276 18 0
                                    


       பள்ளிக்கு அனந்த்தோடு வந்த, அக்னி, சைக்கிளை அதன் ஸ்டான்டில் நிறுத்திவிட்டு, இருவரும் டாட்டா சொல்லி விடைப்பெற்று, அவரவர் வகுப்பறை நோக்கி நடையை கட்டினர்.

அக்னி வந்தது தான் தாமதம் என்பது போல், அவளது தோழிகள் அவளை சூழ்ந்துக்கொள்ள, என்னவாயிற்று என்ற யோசனையுடன், வகுப்பிற்குள்ளே வர, அங்கு கனி அமர்ந்திருந்தாள். அக்னிக்கு அத்தனை சந்தோஷம். ஒரு மாதத்திற்கு பிறகு தனது தோழியை கண்டதும், அவளை வேகமாக ஓடி வந்து அணைத்துக்கொண்டாள். கனியும் அழுதபடியே அக்னியை அணைத்துக்கொண்டாள்.

"நீ ஸ்கூல்க்கே வரமாட்டேனு நினைச்சேன் கனி! உன்ன பார்த்ததும் எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?", அக்னி நெகிழ்வோடு கேட்டவள், தோழியின் உடல் நிலைப்பற்றி கேட்டாள்.

"நானும் இனிமே இங்க படிக்கவேண்டாம், எங்க ஊர்க்கே போகலாம்னு தான் நினைச்சேன்டி. ஆனா, மித்ரன் அண்ணா தான் எல்லாத்தையும் மாத்தினாங்க.", என்றவள் தோழியை தனியாக அழைத்து சென்றாள்.

"என்னடி எதாவது சீரியசான விஷயமா?", அக்னி கேட்க,

"ஆமா அகி! நம்ம கேண்டீன் ஆர்டர் மாத்தினது, முனீஷ் மேல கம்ப்ளைன்ட் பண்ணது, எல்லாத்துக்குமே மித்ரன் அண்ணா தான் காரணம்.

நம்ம இன்ஸ்டிடூஷன்ல தான் அவரும் காலேஜ் படிக்கிறார். நம்ம இன்ஸ்டிடூஷன்ல இருக்கும் எல்லா காலேஜ், ஹ்கூலுக்கு இந்த முனீஷ் தான் புட் ஆர்டர் எடுத்து நடத்துறது. ஆனா யாருக்குமே நல்ல சாப்பாடே கிடைக்கல. நிறைய புகார் பண்ணிருக்காங்க, ஆனாலும் யாரும் பெருசா கண்டுக்கல.

அப்றம் மித்ரன் அண்ணன் தானே முன் வந்து, பிரின்சிபல்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க, ஆனா அந்த முனீஷ் அது உண்மையில்ல, அப்டி இப்டினு சொல்லி பேச்ச மாத்தி, அவர சஸ்பெண்ட் செய்யவச்சிட்டான். ஆனா, மித்ரன் அண்ணன் விடாம, தன்னோடு ப்ரெண்ட்ஸ், அங்க படிக்கிற ஸ்டூடென்ட்ஸ் எல்லாரோட சேர்ந்து நேரா ப்ரின்சிபல் வீட்டுக்கே போய், பேசிட்டார். இப்போ நமக்கு நல்ல சாப்பாடு கிடைச்சிடுச்சு, நானும் இனிமே ஹாஸ்டல் புட் பத்தி கவலைபட தேவையில்ல. உன்ன தினமும் பார்ப்பேன்.", கனி ஒரு பெரிய கதையே சொல்ல...

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now