அத்தியாயம் - 28

260 18 6
                                    


நொடிக்கொரு முறை அக்னியை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் சாணக்கியன். அவளோ சாலையில் பார்வை பதித்து கவனமாக காரை செலுத்திக்கொண்டிருந்தாள்.

அவனுக்கு உறுதியாக தெரியும் அவள் தன் மீது கோபமாக இருக்கிறாள் என. ஆனால் அந்த விபத்தை பற்றி சொல்லும் நிலையில் அவன் உடலும் சரி மனமும் சரி அவளிடம் ஒத்துழைக்கவில்லை.

சஞ்சய் கேட்டபோது சுருக்கமாக அந்த விபத்து பற்றி எழுதி காண்பித்தான். சஞ்சய்க்கு ஏற்கனவே சாணக்கியனை தெரியும் என்ற காரணத்தினால் அவனுக்கு பெரிதாக விளக்கம் தர அவசியமற்றுப்போனது. ஆம்! சஞ்சய்க்கும் சாணக்கியனுக்கும் இதற்கு முன்னரே அறிமுகம் உள்ளது. ஆனால் அதன் பின் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது தான் இருவரும் சந்திக்கின்றனர்.

சாணக்கியனை நோக்கி சஞ்சய், "இதெல்லாம் அக்னிக்கு ஏற்கனவே சொல்லிருக்கீங்களா?", என்றதும் இல்லை என்று சாணக்கியன் கூறிய அர்த்தமும், சஞ்சய் கேட்ட கேள்வியின் அர்த்தமும் விபத்து பற்றியது மட்டுமல்ல, அவனது கடந்த காலத்தையும் சேர்த்தே அவ்வாறு கேட்டிருந்தான்.

சாணக்கியனை சந்தித்த பிறகு சஞ்சய், மருத்துவமனையில் இருக்க முடியாமல், வீட்டிற்கு புறப்பட்டு வந்தான்.

அவனை புன்னகை முகமாக வரவேற்று பருக தேனீர் தந்தாள் வித்யா, சஞ்சயின் மனையாள்.

அவன் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்றுணர்ந்தவளாக, "என்னாச்சுப்பா?", என்றாள்.

"எங்கப்போனாலும் இந்த அஜயால வந்த விணை ரொம்பவே பாதிக்குது விது!", என்று தலையை பிடித்துக்கொண்டான்.

"புரியலைங்க!"

"அஜயோட கேஸ் வாதிடன சாணக்கியன் ஞாபகம் இருக்கா?"

"ஹ்ம்ம்! ஆமாங்க! சின்ன வயசா இருந்தாலும் எவ்ளோ திறமையா புத்திசாலித்தனமா பேசுவாரு. எதிராளியே அவர் பேச்சுல கவுந்திடுவாருனு சொல்லிருக்கீங்களே! இப்போ அக்னி கூட அவங்கள தானே கல்யாணம் செஞ்சிருக்கா, நம்மளால தான் போக முடியல", என்றபோது வித்யாவின் எண்ணங்களில், அப்போது அவளது அம்மா உடல்நிலை கவனிக்க அவள் ஊருக்கு சென்றிருக்க, மருத்துவமனை வேலையில் சஞ்சய் சிக்கிக்கொள்ள, கணவன் மனைவி இருவராலும் அக்னியின் திருமணத்திலும், வரவேற்பிலும் கலந்துக்கொள்ள முடியாது போனது, இதை எண்ணியவளாக,

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now