அத்தியாயம் - 36

242 16 4
                                    


அக்னி தலைக்குனிந்து எதையோ யோசித்தபடியே இருக்க, அனந்த் அவளது தோள் தொட்டான். வெறுமையோடு நிமிர்ந்தவள் மித்ரனது கேள்விக்கு பதிலாக, "உங்க இஷ்டம்!", என்றுவிட்டாள்.

மூர்த்தியும் ஜெயந்தியையும் கண்ட மித்ரன், "நாம எல்லாருமே ஒன்னா தான் இருப்போம்! ஒன் வீக்ல, ஷிப்ட் ஆகுற வேலைய முடிச்சிடலாம்.", என பேச்சை முடிக்க, அவர்களும் பிள்ளைகளின் விருப்பம் என்பதோடு நிறுத்திக்கொண்டனர்.

அதன் பின்னர் இப்போது அனைவரும் மித்ரனது மாளிகையில் உள்ளனர். மற்றவர்களுக்கு எப்படியோ, மித்ரன் மிகுந்த நிம்மதியோடு உணர்ந்தான். அவனது இதயத்தை இத்தனை நாட்களாக தொலைத்தது போல் உணர்ந்தவன், தன்னவள் தன் வீட்டில் பாதுகாப்போடு இருக்கிறாள் என்ற எண்ணம் ஒன்றே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

அனந்த் தினசரி, மித்ரனோடு அவனது உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவன், தானும் அவனோடு இணைந்துக்கொள்வான்.

ஜெயந்தியும் மூர்த்தியும் கூட மித்ரனது பொறுப்புணர்வில் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அறிந்திடாத மித்ரன் இவன்.

சிரிப்பான், சிரிக்க வைப்பான்!
அடிப்பான், சண்டை கட்டுவான்!
பாசத்தில் நனைய வைப்பான்,
பேசியே மனதை கரைப்பான்!
அவன் வளர்ந்த குழந்தை தான்.

ஆண்பிள்ளையற்ற அவர்களுக்கு தங்களது மகளும் திருமணம் முடித்து செல்லவும், மித்ரன் தான் அனைத்துமாகிப்போனான்.

அவனது ஒவ்வொரு செயலிலும் அர்த்தமிருக்கும், தேவையின்றி ஒரு அணுவை கூட அசைக்கமாட்டான். அதனால் தான், அவன் பாக்சிங் விருப்பம் பற்றி தெரிந்தபோதோ, அக்னியை காதலிப்பது பற்றி சொல்லிபோதோ மறுப்பின்றி ஏற்றனர். ஆனால் அக்னி மற்றும் அனந்த் தன் வீட்டிலே இருக்கட்டும் என்றவன் பேச்சு அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிடினும், அவனது விருப்பத்திற்கு மதிப்பு தந்து ஒப்புக்கொண்டனர்.

மித்ரன் வேலைக்கென பணியாளர்களை நியமித்திருந்தான். அக்னி கல்லூரிக்கு செல்ல, அனந்த் பள்ளிக்கு செல்ல, மூர்த்தியோடு மித்ரன் அல்வலகம் செல்ல, வீட்டின் பொறுப்புகளை ஜெயந்தியோடு, தானும் ஏற்று சிறு சிறு உதவிகள் தனது மனத்திருப்திக்காக செய்வாள் அக்னி.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now