அத்தியாயம் - 72

279 16 2
                                    

சாணக்கியன் நீண்ட வருடங்கள் கழித்து அவன் கூறிய முதல் வார்த்தை அக்னிக்காக தான். அவள் சிந்திய கண்ணீருக்கு மருந்தாக, அவளது ஆசை உண்மையாகிவிட்டதை உணர்த்த, அவன் கூறிய, "அழாத பொண்டாட்டி!", என்பது.

அவள் கேட்டு ஒரு நொடி வாயடைத்து உறைந்துவிட்டாள். எத்தனை அழகான உச்சரிப்பு,  அதில் எத்தனை எத்தனையாய் காதல். கீழே அமர்ந்திருந்தவனை அமர்ந்த வாக்கிலே அவள் கட்டிக்கொண்டு கதறி அழத்துவங்கினாள்.

அவனுக்கு எப்படி சமாதனம் செய்வதென தெரியவில்லை. தனக்காக அவள் சிந்தும் கண்ணீர் பிடித்திருந்தது, ஆனால் தனக்காக என்றாலும் அவள் அழுவதை அவனால் தாங்க முடியவில்லை.

"ஹே அழறத நிறுத்து!", என அவளது முதுகை வருடியவாறே கூறினான்.

"என்ன அழவிடு. நான் நல்லா அழனும், ஆனா எனக்கு நீதான் ஆறுதல் சொல்லனும், சமாதனம் செய்யனும்.", அவள் மூக்கு நுனி சிவந்திருக்க, வழிந்த நீரோட, உதட்டோர புன்னகையோடு அவள் கூறி முடிக்க, அவனோ குறுஞ்சிரிப்போடு அவளை தன்னுள் இறுக்கிக்கொண்டான்.

"அழாத அக்னி!", என்று கூற, "அழாத தவிர வேற எதாவது சொல்லுடா.", என அணைத்திருந்தவன் முதுகில் அவள் அடிக்க, "எதுக்கு இவ்ளோ அழுக?", என்றான் அவளை தன்னிலிருந்து பிரித்து.

அவன் முகத்தை நோக்கி குனிந்தவள், அவள் பலமான கைகளில் வாங்கிய அடியால் அவனது இரு பக்க கன்னங்களிலும் அவளது கைத்தடம்.

அவனது கன்னத்தை வருடிறபடியே, "எப்டி விட்டுட்டு போன? ஏன் விட்டுட்டு போன?", என்று எதிர் கேள்வி கேட்டாள்.

அவளை ஆழமாக பார்த்தவன், எழுந்து நின்றுக்கொள்ள, அவளோ தலையை நிமிர்த்தி, அவனது கைகளை பிடித்துக்கொண்டு எதிரே உள்ள இருக்கையில் அமர செய்தாள்.

_ _ _ _ _

சாணக்கியன் மீண்டும் சுயநினைவுக்கு வந்த சமயம், அக்னி ஒரு அலுவலக வேலையாக போயிருக்க, அவனுக்கு துணையாக ஆகாஷ் அங்கு இருந்தான். அது இரவு ஒன்பது மணி போல் இருந்தது. ஆகாஷை அக்னி தான் வரவழைத்திருந்தாள்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now