பயணம் - 5

3.3K 110 3
                                    

மறுநாள் காலையில் வழக்கம் போல அவரவர் வேலைக்கு கிளம்ப மாறன் மட்டும் இன்னும் அறையை விட்டே வெளியே வராமல் இருக்க, அந்நேரம் கிளம்பி தயாராக வந்த நம்ம ஹீரோயின் அம்மா வ பார்த்து அம்மா நான் கிளம்புறேன்...

என்னமா இன்னும் சாப்பிட கூட இல்லை அதுக்குள்ள எங்க கிளம்பிட்டா? எனகல்பனா (மீனு அம்மா) வினவ...

இல்லம்மா ஆஃபீஸ் க்கு போற வழில கீர்த்தி வீட்டுக்கு போகணும் அதான்...

ஏன் மா கீர்த்தி உன்னோட ஆஃபீஸ் தான?

ஆமா... அவளுக்கு இன்னும் 2 நாள் ல நிச்சயதார்த்தம் ம்மா அதனால  அவ ஆஃபீஸ் கு வரல... அதான் நான் னு சொல்லும் முன்பே...

அப்டியா ரொம்ப சந்தோசம்... நல்ல பொண்ணு மா... அத்தை அத்தை னு பாசமா பேசுவா? இருந்தாலும் அவ மேல எனக்கும் கோவம் தான் என கல்பனா பொய் கோவம் கொள்ள...

ஏன் மா?

ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லணும்னு தோணிச்சா? இருக்கட்டும் அடுத்த வாட்டி வீட்டுக்கு வருவால்ல? அப்ப அவகிட்ட பேசிக்கிறேன்...

அய்யோ அம்மா நீ நினைக்கிற மாதிரி லாம் இல்லம்மா அவளுக்கே நேத்து தான் தெரியும்... என தோழி க்கு சப்போர்ட் ஆக மீனு சொல்ல

மீனு மனசுக்குள் அம்மா அவளே ஏதோ குழப்பத்துல இருக்கா? அதென்னான்னு தெரியாம நான் என்ன சொல்றது?

ஏய் எனக்கு தெரியாதா? நம்ம கீர்த்தி ய பத்தி நான் சும்மா சொன்னேன்... சரி இருக்கட்டும் நல்ல விஷயம் சொல்லிருக்க.. சாப்பிடாம போகாத.. கொஞ்ச நேரம் இரு... ஸ்வீட் கொண்டு வரேன் என சொல்லிட்டே கிச்சன் அ நோக்கி சென்றார் கல்பனா..

மீனு சரிம்மா என சொன்னாலும் மனசுக்குள் ஏதோ சந்தேகம் எழ ... சரி அதான் நேர்ல பாக்க போறோமே? அப்போ பேசிப்போம்...

சிறிது நேரத்தில் பாயாசம் செய்து கொடுக்க அதோடு ஒரு டிபன் பாக்ஸ் ஐ கல்பனா நீட்ட...

என்ன என்பது போல் மீனு பார்க்க...

அவளுக்கு நான் செய்ற பாயாசம் ரொம்ப பிடிக்கும்.. அவளுக்கு  அதான் என கல்பனா சொல்ல..

சரிம்மா நான் கிளம்பிறேன்... என கூறிவிட்டு மீனு கிளம்ப

கல்பனா மனசுக்குள் ரொம்ப நல்ல பொண்ணு நான் கூட மீனாட்சி கு கல்யாணம் முடிஞ்ச பிறகு மாறன் கு கேக்கலாம்னு இருந்தேன்... சரி நடக்கிறதுதான் நடக்கும்... என அவர் மனசை சமாதான படுத்தி கொண்டே அவர் வேலையே தொடர்ந்தார்..

ஆனால் பாவம் நம் மாறன் தான் அவன் மனசை எவ்ளோ சொல்லியும் சமாதான படுத்த முடியாமல் அறையை விட்டு வெளியே வராமாலே இருந்தான்...

அண்ணனின் மனதை அறிந்த சக்தியும் இப்போதைக்கு அவனுக்கு தனிமை தர எண்ணி அவன் அவனுடைய வேலைக்கு சென்றான்...

மீனு வருவதை கண்ட கீர்த்தி அம்மா (கோமதி) வாம்மா மீனா? எப்படி இருக்க? வீட்டு பக்கமே வர்றது இல்ல இப்பெல்லாம்...

இல்லத்தை ஆஃபீஸ் ல கொஞ்சம் ஒர்க் அதான்...

சரிம்மா வீட்ல எல்லாரும் எப்படி  இருக்காங்க?

எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை... அது சரி கல்யாண பொண்ணு என்ன பண்றா? எங்க என மீனு வினவ?

மேல அவ ரூம் ல தான் மா இருக்கா? கல்யாண பொண்ணு மாதிரியா இருக்கா? என்ன சொன்னாலும் கோவப்பட்டு கத்துரா? மீனா நீயாச்சும் உன்னோட பிரண்ட் கிட்ட என்னாச்சின்னு கேட்டு சொல்லுமா..

சரிங்க அத்தை... நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க.. திடீர்னு கல்யாணம் னு சொன்னதுல கொஞ்சம் அப்செட் ஆயிருப்பா... நான் என்னன்னு கேக்குறேன்...

சரிம்மா... நீ போய் பாரு மா என சொல்லிவிட்டு கோமதி கிச்சன் க்குள் புகுந்து கொண்டார்...

(இதுவரை மீனு மனதிற்குள் இருந்த சிறிய குழப்பம் இப்போது இன்னும் தீவிரமடைய தொடங்கியது...)

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now