பயணம் - 21

2.8K 92 4
                                    

பாலா இருவரின் இந்த அதிர்ச்சியை கண்டு திகைத்திருக்க அதை கலைக்கும் விதமாக ஷாலு

அப்பா அவன்கிட்ட எதுக்கு இதெல்லாம் குடுகிறீங்க அவன் இதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டான்... என ஷாலு சீண்ட

ஏய் அண்ணா கிட்ட பேசுற மாதிரியா பேசுற என தன் மகளை திட்டிக் கொண்டே காயத்ரி வந்தார்

அப்பா பாருங்கப்பா அம்மா என்னை எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்காங்க...

ஏன் காயத்ரி அவள திட்ற?

ஆமா அவளுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வைக்கிறதே நீங்கதான்...

அவளுக்கு செல்லம் கொடுக்காமா வேற யாருக்கு கொடுக்கிறது? வேணும்னா உனக்கு குடுக்கட்டுமா? என தன் மனைவியை சீண்ட...

அட போங்க... பிள்ளைங்க முன்னாடி என்ன பேசிட்டு இருக்கீங்க?

பாருடா ரொமான்ஸ்ச? அய்யோ அண்ணா நீயெல்லாம் வேஸ்ட் அப்பா வ பாரு அவரை பார்த்து கத்துக்கோ என ஷாலு சொல்ல

அதுவரை அமைதியாக இருந்தவன்... அப்பா இப்ப எதுக்கு இதெல்லாம்... கொஞ்ச நாள் போகட்டுமே என மீனுவை பார்த்து கொண்டே சொல்ல

டேய் என்னடா சொல்ற?

அய்யோ அண்ணா கல்யாணம் ஆன புதுசுல போறதுக்கு பேர் தான் ஹனிமூன்... கொஞ்ச நாளைக்கு அப்புறம் போனா அது டூர்... இதெல்லாம் உனக்கெங்க தெரிய போது? அப்பா நான் தான் சொன்னேன் ல இவன் இதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டான்... பேசாம இதை எனக்கு குடுங்க நானும் என்னோட ஆளும் போயிக்கிறோம்...

ஏன்டி நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்... அண்ணன் னு கொஞ்சமாச்சும் மரியாதை குடுகிறீயா? அப்பா அம்மா முன்னாடி என்ன பேசிட்டு இருக்க? என சரோ ஷாலுவை விரட்ட

அவள் போங்கு காட்டிவிட்டு ஓடினாள்...

இவர்கள் இருவரும் ஓடி விளையாடுவதை பார்த்த மீனுவிற்கு அவள் குடும்பத்தின் நினைவு வர கண் கலங்கினாள்

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now