பயணம் - 32

3.1K 98 9
                                    

மீனு முதலில் செல்ல சரோ அவளை பின் தொடர்ந்து சென்றான்.. அதற்குள் கிரிஷ் இருவருக்கும் நடுவில் வந்து சரோவை தனியாக அழைத்து சென்றான்...

டேய் என்ன எங்கடா கூப்பிட்டு போற?

ம் இருடா சொல்றேன்...

ம் வேகமா சொல்லு.. எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு...

என்ன வேலை? உன் பொண்டாட்டி ய சைட் அடிக்க போற அதான?

சரி சரி விடு கிரிஷ்? என்ன விஷயம் சொல்லு..

டேய் என்ன அந்த ரேஷ்மி கிட்ட இருந்து காப்பாத்துடா?

சரோ விழுந்து விழுந்து சிரிக்க ...

இப்ப ஏன் சிரிக்கிற?

டேய் உனக்கு வெக்கமா இல்ல? ஒரு பெண்ணுக்கு பயந்து இப்படி ஓடி வரீயே? நீயெல்லாம் இந்த சரோ ஓட பிரண்ட் னு வெளிய சொல்லாத...

டேய் என்னடா? இப்ப உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? முடியாதா?

சரி சரி ... இப்ப அவ என்ன பண்ணா?

என்ன டின்னர் க்கு வெளிய கூப்டா? என கிரிஷ் சொல்ல

சூப்பர் டா... கொடுத்து வச்சவன் நீ ?

டேய் என்ன கொலகாரனாக்காத? நான் சொல்றத முழுசா கேளு..

சரி சொல்லு..

அவ என்ன கூப்டா? நான் வர மாட்டேன்னு சொன்னேன்.. அதுக்கு அவ அப்போ எனக்கு ஒரு ஹாப் டே லீவ் வேணும்னா கேட்டா... நானும் சரி நம்மள தொல்லை பண்ணாம இருப்பான்னு நினைச்சி லீவ் குடுத்தேன்...

சரி இதுல என்னடா பிரச்சினை?

இனிமேல் தான் டா பிரச்சனையே ஆரம்பம் ஆச்சி..

என்னடா சொல்ற? அதான் நீ லீவ் குடுத்துட்டேல்ல? அப்பறம் என்ன?

அவ கிளம்புன கொஞ்ச நேரத்துல வீட்ல இருந்து போன் வந்துச்சி... என்னன்னு கேட்டா? அம்மா அவசரமா கிளம்பி கோவில் க்கு வர சொன்னாங்க.. அங்க போனா ஆளுக்கு முதலா அவ நின்னுட்டு இருக்கா? சரி அம்மா எங்க இருக்காங்கன்னு கால் பண்ணி கேட்டா நான் வீட்ல தான் இருக்கேன் னு சொல்றாங்க... என்னம்மா நீங்கதான என்ன கோவிலுக்கு வர சொன்னீங்க?

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now