பயணம் - 59

3.3K 130 51
                                    

கோயம்புத்தூர் வரை பிளைட்டில் செல்வதற்காக ஏர்போர்ட் சென்றனர்... பிளைட்டில் ஏறியவுடன் மீனுவின் அருகில் ரேஷ்மி அமர போக சரோ மெதுவாக அவள் காதருகில் சென்று ஏதோ சொல்ல அவள் சரோவிடம் சார் நீங்க இந்த சீட் ல உட்காருங்க... நான் நித்தி பக்கத்துல உட்காருறேன் என சொல்ல அதற்கு அஷ்வினோ ஏன் என வினவ?

என்ன பாஸ் ஆபீஸ் ல நீங்க தான் எங்க ஹெட்... அதுக்காக பிளைட் ல எந்த சீட் ல யார் உட்காரனும் கூட நீங்கதான் டிசைட் பண்ணுவீங்களா? என சரோ அஷ்வினிடம் கேட்டுவிட்டு மீனுவை பார்த்து மீனு உங்களுக்கு ஒன்னும் நான் இந்த சீட்ல உட்காருறது பிரச்சனை இல்லையே? என சரோ மீனுவிடம் கேட்க... ம் நோ ப்ராபளம் சார்... என மீனு சொல்ல... அப்புறம் என்ன சார்? மீனுக்கும் பிராபளம் இல்ல எனக்கும் ப்ராப்ளம் இல்ல... சோ உங்களுக்கும் ப்ராபளம் இருக்காதுன்னு நினைக்கிறேன்... அதற்கு மேல் அஷ்வினுக்கு பேச வாய்ப்பில்லாமல் போக அமைதியாக அமர்ந்தான்...

சரோ மீனு அருகில் சென்று அமர, சுற்றி ஒரு நிமிடம் பார்த்தவன் மெல்ல மீனு தோள் மீது கை போட அதை தட்டிவிட்டாள் மீனு...

ஒய் பேபி? என சரோ கேட்க

ச் பப்ளிக் பிளேஸ் ல இப்பிடி பிஹேவ் பண்ணா எனக்கு பிடிக்காது... என மீனு சொல்ல

பட் எனக்கு பிடிக்குமே பேபி... அங்க பாரு செல்லம் அந்த ஜோடிய பிளைட் ல இருக்கிற நினைப்பே இல்லாம ஏதோ அவங்க ரூம்ல இருக்கிற லெவல்க்கு பீல் பண்ணிட்டு இருக்காங்க... நீ என்னன்னா? சும்மா தோள் ல கைய போட்டதுக்கே இவ்ளோ பில்டப் பண்ற என சொல்ல...

அவங்க எப்பிடி வேணும்னாலும் இருந்திட்டு போட்டும் பட் எனக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு நான் அப்பிடித்தான் இருப்பேன் என மீனு சொல்ல...

ம் ரொம்ப கஸ்டம் பேபி... மாமா வ பார்த்தா உனக்கு பாவமா இல்லையா? இப்பிடி என் லைப் ல ரொமான்ஸ் ஸீன் க்கு இப்படி புல் ஸ்டாப் வச்சா நான் என்னதான் பண்றது? என சரோ கோபமாக முகத்தை திரும்பிக் கொள்ள , அதில் மெல்ல புன்னகைத்தவள்  மெதுவாக அவன் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து விட்டு ... ம் நான் எப்போ ரொமான்ஸ் ஸீன் வேணாம்னு சொன்னேன்... இந்த இடத்துல வேணாம் னு தான சொன்னேன் என அவள் சொல்ல...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now