பயணம் - 39

3K 107 10
                                    

அஷ்வின் மீனுவை பார்த்து நக்கலாக சிரித்து கொண்டே சரோவிடம்... உங்களை மட்டும் இல்ல உங்க டீம் ல இருக்குற எல்லாரையுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

என்ன சார்?

இல்ல உங்க டீம் ல இருக்குற எல்லாருமே ரொம்ப ஸ்வீட்டா பேசுறாங்க.. அதான் என அஸ்வின் மீனுவை பார்த்து கொண்டே சொல்ல

ஏனோ சரோ இம்முறை அஷ்வினின் பார்வையை கவனிக்க தவறினான். ..

மீனு சரோவிடம் சார் நான் கிளம்புறேன்...

ம் சரி... என சரோ சொல்ல போக.. அதற்குள் அஷ்வின் சரோ ஒன் மினிட்..

மீனா நீங்களும் மறக்காம கண்டிப்பா வந்திரனும் ... இந்த பார்ட்டியே உங்களுக்காக தான் என அஸ்வின் சொல்ல

என்ன என இருவரும் பார்க்க..

இல்ல நம்ம ஆபிஸ் மெம்பெர்ஸ் காக அரேஞ் பண்ணிருக்கேன்னு சொல்ல வந்தேன்...

ம் ஓகே அஸ்வின் என சரோ சொல்ல

ம் நீங்கதான் சொல்றீங்க.. பட் உங்க டீம் மெம்பர் சொல்ல மாட்றாங்களே?

சரோ திரும்பி மீனுவை பார்க்க...

ம் கட்டுன புருஷன் என்கிட்ட பேச வைக்கவே நான் படாத பாடு பட்டேன்... இதுல இவன் இன்னிக்கு வந்திட்டு என் செல்லம் பேசலன்னு சொல்றான்... ஆல்ரெடி அவ என் மேல செம்ம கோவத்துல இருப்பா... வெளில கூப்டு போறேன்னு சொல்லிட்டு பார்ட்டிக்கு வரேன்னு சொல்லிட்டேன்.. நானே எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம இருக்கேன்... இதுல இவர் வேற என்னோட கிரைம் ரேட்ட ஏத்திட்டே போறான். .. என மனதிற்குள் சொல்ல..

என்னாச்சி சரோ? என்ன யோசனை?

ம் அதெல்லாம் ஒன்னும் இல்ல... நான் சொன்னா என் டீம் மெட்ஸ் சொன்ன மாதிரி... என சரோ சொல்ல..

அப்போ ஓகே .. பார்ட்டி ல பாப்போம் ... பாய் என சொல்லிவிட்டு அஸ்வின் சென்று விட்டான்.. இங்கே சரோ மீனுவிடம் சாரி மீனு என சொல்ல..

எதுக்கு இப்ப நீங்க சாரி சொல்றீங்க?

இல்ல நீ பஸ்ட் டைம் என்ன வெளிய கூப்டு போக சொன்ன பட் நான் இப்படி சொதப்பிட்டேன்... சாரி மீனு ...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz