பயணம் - 11

3.4K 106 3
                                    

பேக்டரி யில் கொஞ்சம் பிரச்சினை என சக்தியே போன் பண்ண காரணத்தினால்... பிரச்சினையின் வீரியம் அறிந்து உடனே கோவிலை விட்டு வந்தான் நம் மாறன்...

ஆனால் மனமோ தன்னவள் கூறிய காதல் வார்த்தைகளை அசை போட்ட படி திரிந்த மாறனை அழைத்து சக்தி அவன் கேள்விகளை தொடுத்தான்...

அண்ணா... என்ற சக்தியின் அழுத்தமான வார்த்தைகளே மாறனுக்கு உணர்த்தியது அவன் நீண்ட நேரம் மாறனின் பதிலுக்காக காத்திருக்கிறான் என்று அது புரிய மாறன் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தான்...

அண்ணா ... நீயா இது? என்னடா ஒரே நாள் ல இப்டி ஆகிட்ட?

என்னடா இப்ப பண்ணேன் என மாறன் சக்தியை கேள்வியாய் நோக்க...

டேய் உண்மையாவே உனக்கு தெரிலையா?

என்ன?

டேய் நீ வந்ததுல இருந்து என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உனக்கே தெரியிதா? இல்லையா?

என்னடா சொல்ற?

சக்தி வேகமாக ஒரு அறைக்குள் இழுத்து சென்று மாறனை ஒரு கண்ணாடி முன் நிறுத்தி உன் மூஞ்சை பாரு என கூற..

முகத்தை பார்த்த பின்பும் அவனுக்கு எதுவும் புரியவில்லை என்பதை தெளிவாய் உணர்த்தியது மாறனின் முகம்...

அதை புரிந்த சக்தி சிரித்துக் கொண்டே டேய் நீ வெட்கப்பட்ற அண்ணா... நானே அதை இன்னிக்குத்தான் பாக்றேன்... பொதுவா பொண்ணுங்க தானடா வெட்க படுவாங்க... ஆனா இங்க எல்லாம் தலைகீழா நடக்குது என சக்தி மாறனை சீண்ட..

சக்தி தன்னை கலாய்க்கிறான் என்பதை அறிந்த மாறன் மறுபடியும் ஒரு அசட்டு புன்னகையை உதிர்க்க...

டேய் அண்ணா லவ் வ யாச்சும் நீ முதல் ல சொன்னியா இல்ல அதையும் கீர்த்தி தான் (இல்ல இல்ல அண்ணி தான்) சொன்னங்களா? என சக்தி கேட்க

அதெப்படி உனக்கு தெரியும் என மாறன் உளற..

அப்போ உண்மையாவே இப்படித்தான் நடந்திச்சா? நீயெல்லாம் சக்தி ஓட அண்ணா னு வெளில சொல்லாத...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now