பயணம் - 52

3.1K 125 14
                                    

ரீனா சரோவை கட்டிபிடிப்பதை பார்த்து இங்கே மீனு வேகமாக சரோ அருகில் செல்ல முயல... கீர்த்தி அவளை தடுத்தாள்...

ஏய்.. இருடி... இப்போ நீ அங்க போயி பிளான் ன ஸ்பாயில் பண்ணிராத...

ம் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா என்னோட வாழ்க்கையே ஸ்பாயில் ஆயிடும் உனக்கே இது தப்பா தெரியல... என மீனு கொந்தளிக்க

ஏய் அவங்க ஏதோ பிரண்ட்ஸ் னு நினைக்கிறேன்... அதை ஏன் நீ தப்பா நினைக்கிற? எனக்கு லாம் ஒன்னும் தப்பா தெரியல...

ம் நீ ஏன் சொல்ல மாட்ட... அங்க நிக்கிறது என் ஆளு... இதுவே எங்க அண்ணாவ ஒரு பொண்ணு வந்து கட்டி பிடிச்சா நீ சும்மா இருப்பியா? என மீனு பதில் கேள்வி கேட்க

அது... ம் அவ்ளோ தைரியம் உங்க அண்ணா க்கு இருக்கா? இல்ல வேற பொண்ணுக்குதான் அவ்ளோ துணிச்சல் இருக்கா? கொன்னேபுடுவேன்... என கீர்த்தி ஆவேசமாய் பொங்க...

அங்கே சரோவோ இவர்களை கண்டு கொள்ளாது ரீனா வுடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தான்...

மீனு வேகமாக சரோ டேபிளுக்கு செல்ல முயல... இரு நாங்களும் வருகிறோம் என மற்றவர்கள் கூறினர்... அனைவரும் சரோ அருகில் சென்று நிற்க... ரீனா சரோ கையை பிடித்துக்கொண்டு இவர்கள் வந்தது கூட அறியாமல் பேசிக்கொண்டிருந்தாள்... மீனு சரோவை அழைக்க அவன் அதை கவனிக்காது மும்முரமாக பேச... மீனு தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து வெளியே சென்றாள்... பின்னே கீர்த்தியும் ஹரிணியும் செல்ல... ஹரிணி கீர்த்தியிடம் தான் மீனுவை பார்த்து கொள்கிறேன்.. நீங்க இங்க இருங்க என சொல்லி சென்றாள்...

மாறன் சரோவின் தோளில் கையை வைத்து மாப்பிள்ளை... நாங்களும் இங்க இருக்கோம்... என சொல்ல சரோ திரும்பி... ரீனாவிடம் நான் சொன்னேன் ல அது இவர்தான்... கீர்த்தியை கை காட்டி இவங்களை உனக்கே தெரியும் ரீனா... ஆனா இவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை...

என்ன சரோ நீ இன்னும் திருந்தவே இல்லையா? இந்த லவ்வர்ஸ சேர்த்து வைக்கிறததான் வேலையா பார்த்துகிட்டு இருக்கியா? ம் இப்போ எந்த தைரியத்தில நான் எங்க அண்ணா கல்யாணத்த நிறுத்த உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு நினைக்கிற? என ரீனா கேட்க...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now