பயணம் - 18

3.2K 105 8
                                    

ஆயிரம் ஆசைகளோடும் கனவுகளோடும் காதலியை மனம் முடித்த கர்வதோடும் நாயகன் இருக்க, ஆயிரம் குழப்பத்தோடும், கேள்விகளோடும் இன்னும் தீர்க்கப்படாத தன்னவன் மீதான சந்தேகத்துடனும் நாயகி இருக்க இவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கும் விதமாக அன்று இரவே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது...

இதற்கிடையில் நண்பர்கள் கூட்டமும் சொந்தக்கார பட்டாளமும் சேர்ந்து பொண்ணு மாப்பிள்ளை காண விளையாட்டு சடங்குகள் என சொல்லி அவர்களை பாடு படுத்தினர்...

கீர்த்தி மீனுவிடம் ஏன்டி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...

என்னடி சொல்லு

இல்ல என்னோட நிச்சயம் எப்படி நின்னுச்சின்னு தெரியுமா?

அதுதான் தெரியுமே... சிவா ப்ரோ வேற பொண்ண லவ் பண்றது தெரிஞ்சி உங்க வீட்ல வேணாம் னு சொல்லிட்டாங்க...

அந்த ஐடியா யாரோடது னு தெரியுமா?

எல்லாம் தெரியும் சரவணன் தான?  இந்த மாதிரி குடும்பத்தை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம முடிவு பண்றதெல்லாம் அவர் ஒருத்தர் க்கு மட்டும் தான் வரும்.... என்னமோ போ உங்க வீட்ல இருக்குறவுங்க சிவா ப்ரோ சொன்னத புரிஞ்சிக்கிட்டதால பிரச்சனை இல்லாம முடிஞ்சிசீ...

என்னது சிவா சொன்னாரா? அடி போடி.. அவர் எங்க வீட்டுக்கு வந்து அவர் வேற பொண்ண லவ் பன்ரேன்னு மட்டும் தான் சொன்னாரு ஆனா அதுக்கெல்லாம் எங்கப்பா அசர கூட இல்லை... அதுக்கப்பறம் சரோ அண்ணா தான் பேசுனாரு என அன்று நடந்ததை முழுவதுமாக கூறினாள்... அங்க வந்து அவர் பிரண்ட் காக பேசுனத விட ஒரு பொண்ணோட அண்ணா வ தான் பேசுனாறு... உண்மையாவே சொல்றேன் மீனா அண்ணா ரொம்ப நல்லவரு... உனக்கு புரியும் னு நினைக்கிறேன்...

அதற்குள் கல்பனா வந்து உங்க ரெண்டு பேரையும் பேச விட்ட நாள் புல்லா பேசிட்டு இருப்பீங்க... சீக்கிரம் பொண்ண ரெடி பண்ணுங்க என சொல்லிவிட்டு சென்றார்...

மீனு பதில் சொல்லும் நிலைமையிலோ இல்ல கீர்த்தி கூறியதை சிந்திக்கும் மனநிலையிலோ சுத்தமாக இல்லை... அவள் சிந்தனை முழுவதும் இப்போது அவனிடம் தனியாக மாட்டினால் அவன் தான் சொல்ல வருவதை புரிந்து கொள்வானா? இதுவரை இருந்த தைரியம் கொஞ்சம் குறைந்து கலக்கத்தை ஏற்படுத்தியது... அங்கு சரோவின் நிலையோ வார்த்தைகளால் சொல்ல முடியாத நிலை  ஏற்கனவே அவளை திருமண கோலத்தில் பார்த்ததலிருந்து அவன் காதல் கொண்ட மனம் பல சேட்டைகளை செய்ய துடித்தது அதையெல்லாம் போராடி இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்... இப்போது தனிமையில் இரவில் அதுவும் தன்னவளோடு இருக்கையில் இந்த கட்டுப்பாட்டை மீறி விடுவோமோ என்ற அச்சத்தில் தனக்குத்தானே தைரியம் சொல்லி கொண்டிருந்தான்... அதே சமயம் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்ப அங்கே தேவதையின் மறு உருவமாய் வந்து நின்றாள் நம் நாயகி... இதுவரை இருந்த கட்டுப்பாடு கொஞ்சம் தளர்வதை உணர்ந்த சரோ முகத்தை வேறு புறம் திரும்பி மனதிற்குள் என்ன சரோ ஏன் நீ இப்டி இருக்க? சும்மாவே அவளுக்கு உன் மேல ரொம்ப நல்ல எண்ணம் இதுல நீ வேற இப்டி நடந்துகிட்டா அவளுக்கு எப்படி உன் மேல நம்பிக்கை வரும்..  காலையில வரைக்கும் ஒழுங்காதான இருந்த இப்ப மட்டும் உனக்கு எண்ணாச்சி? பி கன்ரோல்  சரோ யூ வில் டூ இட்... என தனக்குத்தானே சொல்லி கொண்டு மீனுவின் புறம் திரும்பினான்.. அவள் தயங்கி நிற்பதை பார்த்து கட்டிலை விட்டு இறங்கி அருகில் இருந்த சேர்ரை இழுத்து போட்டு அமர்ந்தான்... மீனு வந்து கையில் இருந்த பாலை சரோவிடம் நீட்டி விட்டு நான் உங்ககிட்ட என மீனு பேச தொடங்கும் முன்பே சரவணன் இடைமறைத்து, பாலை வாங்கி ஒரு புறம் வைத்து விட்டு மீனுவை அமர சொல்லிவிட்டு அவனே பேச்சை தொடங்கினான்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now