பயணம் - 13

2.9K 100 1
                                    

மறுநாள் காலை மீனு கோவிலுக்கு செல்ல அங்கே சரோ நிற்பதை பார்த்து விட்டு அங்கே சென்றாள்

வாங்க மீனாட்சி...

என்ன எதுக்கு வர சொன்னீங்க? என்ன பேசணும்?

ம் அது சிவா வீட்ல அவன் லவ் பண்ற விஷயத்தை அவனால இப்ப சொல்ல முடியாது... அப்டியே சொன்னாலும் அதை அவங்க அப்பா பெருசா எடுத்துக்க மாட்டாரு.. அதனால நீங்க உங்க பிரண்ட் வீட்ல என சரோ சொல்லும் முன்பே...

இல்ல இல்ல எங்களாலயும் இப்ப உடனே வீட்ல சொல்ல முடியாது... என மீனு முந்திக் கொண்டு சொல்ல...

என்ன இவ நம்ம சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே இவளா ஒன்னு நினைச்சி பேச ஆரம்பிக்கிறா? அய்யோ சரவணா? நீ ரொம்ப பாவம் டா.. இவளுக்கு உன் மேல நல்ல எண்ணத்த வரவச்சி  அதுக்கப்புறம் உன்னோட லவ் அ புரியவச்சி இதெல்லாம் நடக்குற காரியமா? என அவனுக்குள்ளே பேசி கொண்டு

ஹலோ மேடம்... கொஞ்சம் நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேளுங்க என சரோ சொல்ல

சரி சொல்லுங்க...

நான் என்ன சொல்ல வந்தேன்னா? (அய்யோ நான் என்ன சொல்ல வந்தேன்னு எனக்கே மறந்திடும் போல? ஆன் ஞாபகம் வந்திரிச்சி) உங்க பிரண்ட் வீட்லயும் உங்களால  சொல்ல முடியாது.. அதனால நானும் என் பிரண்ட்-ம் வந்து உங்க பிரண்ட் வீட்ல சிவா லவ் பண்றத பேசுறோம்.. அதே மாதிரி நீங்களும் உங்க பிரண்ட்-ம் சிவா வீட்ல பேசுங்க என சொல்ல?

ம் ஆனா ...  கீர்த்தி எப்படி வர முடியும்... அவளுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம்... என மீனு சொல்ல..

அட ஆமா இப்டி ஒரு பிரச்சனைய மறந்திட்டேனே...

ம் இப்ப என்ன பண்றது?

பரவாயில்ல.. பிளான் பண்ன மாதிரி நாங்க கீர்த்தி வீட்ல பேசுறோம்... அதுக்கப்பறம் நடக்கிறத பார்த்துப்போம்...

என்ன விளையாட்ரீங்களா? நீங்க உங்க பிரண்ட் ஓட வந்து கீர்த்தி வீட்ல பேசுனா மட்டும் உடனே இந்த நிச்சயத்த நிறுத்திருவங்களா? ஒரு பொண்ண பெத்தவுங்க வீட்ல ஒரு நிச்சயம் நின்னா அது எவ்ளோ பெரிய பிரச்சனை தெரியுமா?

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now