பயணம் - 16

2.9K 103 2
                                    

கீர்த்தி சரோவிடம் சரி சொல்லிவிட்டு மீனுவை நோக்கி சென்றாள்...

மீனா...

என்னடி? ஏன் கத்துற?

இல்ல நான் கேக்கணும்னு நினைச்சேன்? மாப்பிள்ளை எப்படி இருப்பாரு?

எந்த மாப்பிள்ளை?

ம் என்னோட மாப்பிள்ள... என கோவமாக கீர்த்தி சொல்ல

ம் ஏண்டீ எங்கன்னா எப்படி இருப்பாருன்னு உனக்கு தெரியாதா?

ஏய் விளையாடாத? உனக்கு பார்திருக்குற மாப்பிளை ய பத்தி கேட்டேன்...

ம்.. இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?

சொல்லுடி...

ம் தெரியாது...

விளையாட்ரீயா?

இல்லடி நிஜமாவே எனக்கு தெரியாது... நான் இன்னும் மாப்பிள்ளை போட்டோ கூட பாக்கல...

என்னடி சொல்ற? ஏன் பாக்கல?

ம் பாக்கணும்னு தோணல... அது மட்டும் இல்ல வீட்ல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.. இதுல நான் பாக்குறதுக்கு என்ன இருக்கு?

ஏய் இது உன்னோட வாழ்க்கை... வாழ போற உனக்கு பிடிக்க வேணாமா?

ஏய் நான் இப்ப பிடிக்கலன்னு சொல்லவே இல்லையே? எங்க வீட்ல எல்லாருக்கும் ஒரு விஷயம் பிடிச்சிருக்குன்னா? அது கண்டிப்பா எனக்கும் பிடிக்கும்...

ஏய் லூசு மாதிரி பேசாத? உன் கூட வாழ போற ஒருத்தர பாக்கணும்னு கூட உனக்கு தோணலையா? ஒரு வேல அந்த பைய்யன் பாக்றதுக்கு சுமாரா இருந்தா?

ஏய் அப்போ என் அண்ணா அழகா இருக்கிறதால தான் எங்கன்னா வ கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறீயா?

ச்சி சீ.  என்னடி இப்டி சொல்லிட்ட... நான் அந்த அர்த்தத்துல கேக்கல

அப்புறம்?

இல்ல அந்த மாப்பிள்ளை ய பத்தி தெரிஞ்சிக்கிறதுல என்ன தப்பு?

நான் தப்புன்னு சொல்லல... என்ன விட என் மேல எங்க வீட்ல எல்லாருக்கும் பாசம் அதிகம் அப்டி இருக்கிறப்ப எனக்காக அவங்க நல்ல ஒருத்தர தான் பார்திருப்பங்க...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now