பயணம் - 62

4.5K 121 14
                                    

சரோ மீனு இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர்... பயண களைப்பில் இருவரும் அன்றிரவு தன்னை மறந்து தூங்க மீனுவோ வழக்கம் போல் அவன் மார்பில் விழி மூடி தூங்கினாள்... உறக்கத்தில் அவளை அணைத்து கொண்டே உறங்கிப் போனான்... மறு நாள் பொழுது அழகாக விடிய மீனுவிற்கு முன் எழுந்தவன் மீனுவை எழுப்ப அவளும் அவர்கள் ஒப்பந்தப்படி அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்தாள்... இருவரும் கிளம்பி ஆபிஸ் சொல்ல மீனுவோ சரோ தோள் மீது சாய்ந்து கொண்டே ஊட்டியில் அவள் பார்த்த பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்தனர் இருவரும்... ஆபிஸ் வர ... முதலில் மீனு இறங்க... மீனு நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன் நீ முன்னாடி போ என சொல்ல அவளும் ஆபிஸிற்குள் நுழைந்தாள்...

மீனுவை பார்த்து ரேஷ்மி அங்கு ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டவள்... இந்தாம்மா உன்னோட சீட்டு... இனிமேல் நீ ரோமியோ டீம் என சொல்லியவள்...  ம் அது சரி என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட என கிண்டலாய் கேட்க?

மீனு அவளை புரியாமல் பார்க்க...

ம் இல்ல மேடம் ஒரு வாரம் ஹனிமூன் போனது பத்தலன்னு யாரோ இன்னும் ஒரு வாரம் லீவ் வேணும்னு கேட்டாங்களாம் அதான் என நித்தி சொல்லிக்கொண்டே அங்கு வர...

ம் இல்ல அது ஊட்டில புயல் பா அதான்... என மீனு சொல்ல அவள் சொன்னதை கேட்டு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க...

இப்போ ஏன் சிரிக்கிறீங்க? என மீனு கேட்க?

ம் அப்புறம் என்னடி... ஊட்டி ல வந்த புயல் ஒரே நாள் ல வந்த வேகத்துலையே ரிட்டர்ன் போயிடுச்சு... நீ என்னமோ பத்து நாளைக்கு புயல் தாக்குன மாதிரி பில்டப் கொடுக்கிற? என நித்தி கேட்க...

என்ன நித்தி புரியாம பேசுற? அதெல்லாம் ஊட்டி ய சுத்தி பார்க்க போனவுங்க கிட்ட கேட்கணும்... சும்மா ரூம் ம சுத்தி பார்த்தவுங்களுக்கு எப்படி தெரியும் என ரேஷ்மி சொல்ல...

மீனுவோ... கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் கோபம் என பதில் சொல்வதறியாது முழித்துக் கொண்டிருந்தாள்... அந்நேரம் அங்கு வந்த சரோ...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя