பயணம் - 56

3.5K 133 36
                                    

ரீனா சொன்னதை கேட்டு மீனுவிற்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியாமல் அமைதியாய் அமர்ந்தாள்... அவள் மனதில் அப்போது ஓடியது ஒன்றே ஒன்று தான் அது சரோவை காண வேண்டும் என்பதே... அவள் மனதில் நினைக்கும் முன்பே அவள் நினைப்பதை செய்பவன், அவள் மனதில் பார்க்க வேண்டும் என்று நினைத்ததை மீறுவானா?

மீனு என சரோ கூப்பிட... திரும்பி தன் கனவனை திரும்பி பார்த்தவள் சுற்றுப்புறத்தை மறந்து ஒரே எட்டில் அவனைத் தாவி கட்டிக்கொண்டாள்... கீர்த்தியிடம் கல்யாணப்புடவையை காட்டுவதற்காக மாறன் வர... அளவு சரியாக உள்ளதா என கேட்பதற்கு கல்பனா மற்றும் ஷாலுவும் உடன் வந்திருந்தனர் மணமகள் அறைக்குள் இவர்களை பார்த்து வந்த அனைவரும் அமைதியாக நகர.. கீர்த்தியும் மாறனுடன் அவ்வறையை விட்டு வெளியே சென்றாள்...

மீனு என்னாச்சி டா? எதுவும் பிரச்சனையா? என சரோ கேட்க அவள் எதுவும் பேசாமல் நிமிர்ந்து அவனை பார்த்தாள்... சொல்லுடா என அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் இதழை சிறை செய்திருந்தாள்... அவன் மேல் அவள் கொண்ட காதலை வார்த்தைகளால் சொல்லத்தெரியாமல் அவனுக்கு மட்டும் புரியும் மொழியில் சொல்ல முயற்சித்தாள்... அவள் மேல் அவன் கொண்ட காதலுக்கு ஈடாக தன் காதல் இல்லாவிடிலும் அதை சரிகட்டும் அளவுக்கு இருக்காதா? என்ன? ஒரு முத்தத்தில் அவளால் மட்டும் சொல்லிவிடவா முடியும்? நீண்ட நேரத்திற்கு பின் விலகியவள் அவன் முகத்தை கைகளில் ஏந்தி முகம் முழுவதும் முத்தத்தை வாரி வழங்கியவள் ஐ லவ் யூ மாமா என சொல்லி அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்...

என்ன நடக்கிறது என புரியாத வேற உலகில் இருந்தவனை அவளின் மாமா என்ற அழைப்பு நடப்புக்கு கொண்டு வந்தது.... மீனு இப்போ நீ என்ன சொன்ன? என அவள் முகம் நிமிர்த்தி கேட்க சிறு பிள்ளை போல் அவன் சட்டையில் முகம் மறைத்துக் கொண்டாள்... பொண்டாட்டி இன்னும் ஒரு தடவ சொல்லுடி பிளீஸ் செல்லம் என அவன் கெஞ்ச... அவன் இரு கன்னத்தை பிடித்து மாமா ஐ லவ் யூ ஐ லவ் யூ லவ் யூ சோ சோ சோ  மச்.... என மீனு காதல் பொங்க கூறினாள்... தன் மீது அவள் கொண்ட காதலை அவள் கண்களில் கண்டவன் அவளை தூக்கி சுற்றினான்...  மெதுவாக அவளை இறக்கி விட்டவன் அவள் காதலை அழகாய் காட்டிக் கொடுத்த அவள் விழிகளுக்கு முத்த மிட்டு அவளை நோக்கி? என் மீனு குட்டிக்கு இன்னிக்கு என்னாச்சி என சரோ கேட்க....

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now