பயணம் - 37

3K 110 18
                                    

மறுநாள் பொழுது அழகாக விடிய வழக்கம் போல் சரோ மீனு இருவரும் ஆபிஸ் கிளம்பினார்கள்..

மீனுவின் குடும்பத்தினரும் அவர்கள் ஊருக்கு செல்ல தயாராகினர் .. ஷாலு சக்தியின் வம்பு சண்டைகள் என அந்த காலை பொழுது கலகலப்பாக ஆரம்பித்தது...

கீர்த்தி மீனுவிடம்...

சரி மீனா... நான் போயிட்டு வரேன்...

சரிடி... வீட்ல எல்லாரையும் நல்லா பார்த்துக்கோ..

ம் ஓகே மேடம்... இதை நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியனுமா?

அது இல்லை....

சரி அதை விடு.. உனக்கும் சரவணன் அண்ணாக்கும் எல்லாம் நல்லாதான போகுது...

என்ன? என மீனு புரியாமல் பார்க்க..

பாருடா... நீங்க புரியாத மாதிரி பார்த்தா நாங்க நம்பனுமா?

ஏய் சீரியஸா நீ என்ன கேட்கிறேன்னு புரியல..

ம்.. உங்க லவ் ஸ்டோரி எந்த ஸ்டேஜ் ல இருக்குன்னு கேட்டேன்...

எந்த ஸ்டேஜ் னா?

அய்யோ முடியல... உன்கிட்ட போயி கேட்டேன் பாரு...

என்னடி? புரியிற மாதிரி கேளு...

ம்... எனக்கு தேவையான ஆன்சர் உன்னோட இந்த கேள்வி லயே எனக்கு புரிஞ்சிறிச்சி... அண்ணன் நிலைமை ரொம்ப பாவம்...

யாரு அவரு பாவமா?.. அவர்கிட்ட மாட்டிக்கிட்டு நான்தான் பாவம்...

ஓ இப்போ மட்டும் நான் சொன்னது உனக்கு புரிஞ்சிரிச்சா?

ம் இப்போ உனக்கு என்ன தெரியணும்? நீ நினைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்லை... இப்போதைக்கு நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் அவ்ளோதான்...

நீ பேசுன பேச்சுக்கு அண்ணா வ பிரண்ட் டா ஏத்துகிட்டதே பெரிய விஷயம் தான்.. ஆனா எனக்கென்னமோ நீ உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வெறும் பிரன்ஷிப் தான் இருக்குன்னு தப்பா கெஸ் பன்ரேன்னு நினைக்கிறேன்... வெளில இருந்து பார்க்கிற எங்களுக்கே தெளிவா புரியிது இது லவ்ன்னு... உனக்கு புரியலையா?

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now