பயணம் - 7

3.1K 112 7
                                    

சிவா ரூம்மில் ஆடவர் மூணு பேரும் ஆளுக்காலு ஒவ்வொரு ஐடியா குடுக்க கடைசியில் சிவா சொன்ன மாதிரியே அந்த பொண்ண பார்த்து சொல்லிடலாம்னு முடிவாக,

நான் எப்படிடா? இது மட்டும் எங்க அப்பாக்கு தெரிஞ்சிச்சி என சிவா பேக் அடிக்க..

டேய் நீ தான் அ லவ் பண்ற அதனால நீதான் சொல்லணும்... என சரோ கூற

எல்லாம் சரி தாண்டா ஆனா எனக்கு பயமா இருக்கு.. ஒரு வேலை அந்த பொண்ணு கத்தி அழுது வீட்ல சொல்லிட்டா? என சிவா தயங்க

டேய் நீ என்ன அந்த பொண்ணுகிட்ட லவ்வா சொல்ல போற? உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்றதுக்கு ஏன்டா இந்த பில்டப் என சரோ கூற

டேய் இது என்ன சிட்டியா? இது கிராமம் டா என சிவா சொல்ல

டேய் சரோ இவன் சொல்றதும் கொஞ்சம் கரெக்ட் ஆ தான் தோணுது என க்ரிஷ் சொல்ல

உடனே சரோ சரி விடுங்க நான் வேணும்னா அந்த பெண்ணுக்கு புரியிர மாதிரி பொறுமையா சொல்றேன் .

சரோ நீ தான் இதுக்கெல்லாம் கரெக்ட் ஆன ஆளு என க்ரிஷ் அதை ஆமோதிக்க...

என் நண்பேன்டா என சிவா சரோவை கட்டி அணைக்க

அட போங்கடா இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அடி வாங்க வைக்கிறது என சரோ வடிவேல் பாணியில் கூற

மூவரும் சிரிக்க தொடங்கினர்...

***

இங்கே கீர்த்தி வீட்டில் மீனு அதிர்ச்சியில் இருந்து மீண்டு கீர்த்தியை பார்க்க..

அவளோ மீனு கொண்டு வந்த பாயாசத்தை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு கொண்டிருந்தாள்

அதை பார்த்த மீனு ஏண்டி தின்னிபண்டாரம்... நீ சொன்னத கேட்ட எனக்கே தலை சுத்திரிச்சி.. ஆனா நீ என்னன்னா இப்டி தின்னுட்டு இருக்க என கத்த..

அது இல்லடி நேத்துல இருந்து சரியா சாப்பிடவே இல்லையா, அதான் அது மட்டும் இல்ல எனக்கு அத்தை செஞ்ச பாயாசம் எவ்ளோ பிடிக்கும்னு உனக்கே தெரியும்.. ஒரு வேல நான் சொன்னதை கேட்டு கோவப்பட்டு இதை குடுக்காமலே போயிட்டா? அதான் என குழந்தை போல முகத்தை வைத்து கொண்டு கீர்த்தி சொல்ல

அதை கேட்டு சிரிப்பதா? இல்லை முறைப்பதா என புரியாமல் மீனு பார்க்க...

அவள் பார்வையின் அர்த்தம் உணர்ந்து சரி சரி நான் அப்புறமா சாப்பிடறேன்... இப்ப என்ன பண்றது என பாவமாய் கீர்த்தி வினவ...

அடி பாவி செய்றதெல்லாம் செஞ்சிட்டு இப்டி என்ன பண்றதுன்னு என்கிட்ட கேக்குற என மீனு சொல்ல

என் செல்ல பிரண்ட் ல, நீ எனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருடி பண்ணுவா என செல்லமாய் கீர்த்தி கேட்க

ஆமா நான் உனக்கு பிரண்ட் னு இப்பத்தான் தெரிஞ்சிச்சா? இருக்கட்டும் இதுல எங்க அண்ணா அவனை வீட்ல போயி பேசிக்கிறேன்.. என மீனு பொய் கோவம் கொள்ள...

பிளீஸ் டி உங்க அண்ணா இன்னும் என்கிட்டயே லவ் அ சொல்லல அப்புறம் எப்டிடி உன்கிட்ட சொல்லுவாரு என கீர்த்தி விளக்கம் தர...

பாருடா... அதுக்குள்ள சப்போர்ட்டா? உங்களுக்கெல்லாம் என் சக்தி அண்ணா தான் கரெக்ட் என மீனு சொல்ல

மீனா ஒன்னு சொல்லவா? என கீர்த்தி இழுக்க

இதுக்கு மேல என்ன இருக்கு சொல்றதுக்கு என அப்பாவியாய் கேட்டாள் நம் மீனு...

இல்ல மீனா உங்க மாறன் அண்ணா என்ன லவ் பண்ராருன்னு என்கிட்ட சொன்னதே உங்க சக்தி அண்ணா தான்...

என்ன? அட கடவுளே... இதெல்லாம் எப்ப நடந்திச்சி? என அப்பாவியாய் கேட்ட மீனு..

(என்ன பண்றது நம்ம ஹீரோயின் காலேஜ் டாப்பர் பட் இந்த லவ் அப்டின்ற சப்ஜெக்ட் ல மட்டும் அறியர் வச்சிட்டாங்க... அதனால நம்ம ஹீரோ ஓட நிலைமை கொஞ்சம் பாவம் தான்... 😋😋😋)

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now