பயணம் - 20

3.2K 113 7
                                    

சரோவின் பெற்றோரும் க்ரிஷ் -ம் ஏர்போர்ட்டில் இருந்து வரும் வழியில் முன்னதாக கிளம்ப. சரோ மீனு ஷாலு சிவா மற்றும் ஹரிணி அனைவரும் ரெஸ்டாரன்றிற்கு சென்றுவிட்டு தாமதமாக வந்தனர்... அனைவரும் செல்வதாகவே ஆரம்பத்தில் சரோ சொல்ல காயத்ரி தான் வீட்டில் முக்கியமாக சில வேலைகள் இருப்பதாக கூறி உதவிக்கு க்ரிஷ் யையும் கூட்டிக் கொண்டு சென்றனர்...

சரோவும் மீனுவும் காரை விட்டு இறங்கி வாசலுக்கு வர காயத்ரி ஆரத்தி எடுத்து இருவரையும் வீட்டிற்குள் அழைத்தார்...

மீனுவோ இனிமேல் இதுதான் நம் வீடு என்று மனதில் பதிய வைக்க நினைத்தாலும் ஒரே நாளில் இத்தனை வருடங்கள் வாழ்ந்த தன் குடும்பத்தையும் வீட்டையும் விட்டு விட்டு திடீரென இன்னொரு வீட்டில் உடனடியாக சகஜமாக வாழ தொடங்குவது சாத்தியமற்றது... எனினும் தன் முழு மனதோடு அதை ஏற்க முடிவெடுத்தாள்

அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை ஓரளவு யூகித்த சரோவோ மெதுவாக மீனுவின் அருகில் சென்று...

மீனு உங்க வீடு அளவுக்கு இல்லனாலும் எங்க வீடும் கொஞ்சம் நல்லாதான் இருக்கும்... வேணும்னா உள்ளக்க வந்து நல்லா பாருங்களேன்... என சரோ கூற

அப்போதே தாங்கள் இருவரும் வெகுநேரமாக வெளியில் நிற்பதை உணர்ந்த மீனு தன்னவனோடு சேர்ந்து தங்கள் வீட்டிற்குள் சென்றனர்...

இவ்ளோ நாள் இங்கேயே இருந்தாலும் இன்று ஏனோ தன்னவள் உடன் சேர்ந்து வீட்டினுள் நுழையும் இக்கணம் அவனுக்கும் ஏதோ ஒரு இனம்புரியாத பூரிப்பு உண்டானது... அந்த பூரிப்பிற்கான காரணம் சந்தோசமா? அதிர்ச்சியா? இல்லை பொறுப்பா? என சொல்ல தெரியவில்லை...

சரோ சிவா,ஹரிணி மற்றும் க்ரிஷ் உடன் பேசிக் கொண்டிருக்க ஷாலு மீனுவை இழுத்துக் கொண்டு சரோவின் அறைக்கு சென்றாள்...

அண்ணி இதுதான் இனிமேல் உங்களோட ரூம்...

மீனு மெதுவாக அந்த அறையை சுற்றி பார்த்தாள்... அதில் அவள் விழிகளுக்கு முதலில் தெரிந்தது... பெரிதாக மாற்றப்பட்டிருந்த சரோ மீனுவின் புகைப்படமே அது அவர்களின் நிச்சயத்தில் எடுத்தது அதில் மீனு சரோவின் சட்டை காலரை இருகைகளாலும் இறுக்க பிடித்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தது... அதை பார்த்த அக்கணம் மீனுவின் மனதில் அன்றைய காட்சி வந்தது...
நிச்சயத்தன்று சரோ மீனுவிடம் தனியாக பேச வந்த போது அவனுக்கு போனில் அழைப்பு வர அதை எடுத்து பார்த்தவன் மீனுவை பார்த்து கொண்டே பின் நோக்கி நகர அருகில் இருந்த சேர் தடுக்கி கீழே விழ போனவனை மீனு இறுக்கி பிடித்து இழுக்க இருவரும் ஒருவரை ஒருவர் சில வினாடிகள் அப்படியே பார்த்து கொண்டிருந்தனர்.. அன்றைய சிந்தனையில் மூழ்கி இருந்தவளை ஷாலுவின் அழைப்பு நடப்புக்கு கொண்டு வந்தது...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now