பயணம் - 24

3K 106 5
                                    

சரோ அவன் அறைக்கு சென்று பார்க்க அங்கே மீனு ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். 

என்ன மீனு? யோசனையெல்லாம் ரொம்ப பலமா இருக்கு?

அப்டில்லாம் ஒன்னும் இல்ல

ம் சரி ... நாளைக்கு உனக்கு பஸ்ட் டேய் ஆஃபீஸ் தான... சீக்கிரம் படுத்து தூங்கு... நானே நாளைக்கு உன்னை ஆஃபீஸ் ல ட்ராப் பன்றேன்... உனக்கு ஓகே தான?

இல்ல ஆஃபீஸ் க்கு ஒன்பது மணிக்கு வர சொல்லிருக்காங்க...

சரி அதுல என்ன பிரச்சனை?

எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ... உங்களுக்குத்தான். . .

எனக்கென்ன.... (அப்போதே அவள் சொல்ல வருவதின் அர்த்தம் உணர்ந்து... ) ஏய் நான் ஒன்னும் எல்லா நாளும் லேட்டா எந்திக்க மாட்டேன்... எனக்கும் ஆஃபீஸ் ஒன்பது மணிக்குத்தான்... வீக் என்ட் தான்... அப்டி என சொல்ல

மீனு சிரித்து கொண்டே... ம் பாக்கலாம்...

டேய் சரவணா என்ன இவ இப்டி சொல்லிட்டா? டேய் இது உன் மான பிரச்சினை எப்டியாச்சும் நாளைக்கு மட்டும் அவளுக்கு முன்னாடி எந்திரிச்சிடுடா என தனக்குள்ளே சொல்லிக் கொள்ள...

ம் ஆல் தி பெஸ்ட் சரவணா...

என்னது ...

இல்ல ஆல் தி பெஸ்ட் லாம் சொல்ல மாட்டிங்களா?

ம் அதை நான் நாளைக்கு தான் சொல்வேன்...

மீனு அதையும் பாப்போம் என சொல்லிவிட்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்...

என்ன இவ? இப்டி சொல்றா? ம் சரோ வழக்கம் போல இன்னிக்கும் அவள நினைச்சிட்டே தூங்காம இருந்த நாளைக்கு அவ சொன்ன மாதிரி தான் நடக்கும்... பேசாம குறிப்பா அவள பாக்காம தூங்கு என சொல்ல

அவனும் உருண்டு பிரண்டு எவ்ளோவோ முயற்சி பண்ணியும் கண்களை மூடினாலே தன்னவளின் உருவமே வந்து இம்சை பண்ண... எழுந்து மீனுவை பார்த்தான்...

அவள் வழக்கம் போல நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்..

இவளுக்கு மட்டும் எப்படித்தான் தூக்கம் வருதோ? என்னைய தூங்க விடாம இவ மட்டும் நிம்மதியா தூங்குறா... என மீனுவை முறைத்து பார்க்க...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now