பயணம் - 50

3.2K 132 22
                                    

மீனுவே சரோவிற்கு கால் செய்தாள்... முதல் அழைப்பிலேயே சரோ எடுத்து சாரி டி பொண்டாட்டி... எனக்கு தெரியும் நீ சீக்கிரமா என்னை மன்னிச்சிடுவேன்னு... அதான் போன் ன கைலயே வச்சிருந்தேன்...

மீனு அமைதியாகவே இருக்க...

மீனு ஏதாச்சும் பேசு... இன்னும் என் மேல உனக்கு கோவம் போகலையா? சாரி டா... கொஞ்சம் ஒர்க் அதான்.. கால் பண்ணல... அதுக்காக இப்பிடி பேசாமா இருந்தா எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு... பிளீஸ் எதாச்சும் சொல்லு இல்லன்னா திட்டு... என சரோ சொல்ல

சரோவின் பேச்சை கேட்டு மீனுவிற்கு கண்கள் குளமாய் மாறி அழத் தொடங்கினாள்...

மீனு எண்ணாச்சி? இப்போ ஏன் நீ அழுகுற?

நான் உங்களை.... இப்பவே பார்க்கணும்.... என அழுது கொண்டே சொல்ல...

மீனு... சொல்லுடா ஏதாச்சும் பிரோப்ளம்மா? நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா?, யாரும் எதுவும் சொன்னங்களா?

ம் அது... சாரி நான் உங்க மேல கோவப்பட்டதுக்கு நீங்க எனக்காக நைட் புல்லா ஒர்க் பண்ணிருக்கீங்க ஆனா நான் அது தெரியாம உங்களுக்கே பனிஸ்மெண்ட் குடுத்திருக்கேன்...

இல்லடா... அப்டில்லாம் ஒன்னும் இல்ல.. என் பொண்டாட்டி என் மேல கோவப்படறதுக்கு உரிமை இல்லையா? இதுக்கெல்லாம் நீ பீல் பண்ணாத...

மீனு திரும்ப திரும்ப சாரி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தாள்...

சரோ எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் மீனுவின் அழுகையை நிறுத்த முடியவில்லை...

சரி நான் உன் சாரிய அக்சப்ட் பண்ணிட்டேன்... நான் உன்னை மன்னிச்சிட்டேன் போதுமா?

ம் அப்போ உண்மையாவே என் மேல உங்களுக்கு கோவம் இல்லையா? என மீனு கேட்க...

ஏய் என் சின்ன குழந்தை மேல நான் கோவப்படுவேணா? உன்னை எனக்கு பிடிச்சதுக்கு பர்ஸ்ட் ரீசனே உன்னோட கோவம் தான்... சரியா... சரி நீ தயர்டா இருப்ப கொஞ்ச நேரம் படுத்து தூங்கு.. என சரோ சொல்ல

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now