பயணம் - 57

3.4K 132 22
                                    

ஐந்து ஜோடிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி அரட்டையடித்துக் கொண்டிருந்ததில் மீனுவிற்கு உறக்கம் வர சரோ தோள் மீது சாய்ந்து உறங்கிப் போனாள்... சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராய் உறங்க ஆரம்பிக்க ஷாலு உறக்க கலக்கத்தில் சக்தி மீது சாய அவன் அவளை எழுப்ப முயன்றான்...

ஏய் வாலு... கீழ போயி தூங்கு என சொல்ல, அவளோ அறை உறக்கத்தில் ம் நான்தான் தூங்கிட்டு இருக்கேன் ல வேனும்னா நீ தூக்கிட்டு போ சக்தி என தூக்க கலக்கத்தில் கனவு என நினைத்து ஷாலு சொல்ல சரோ அதை நன்கு கவனித்தான்... இருந்தும் தன் தங்கையின் மனதில் இருப்பதை ஓரளவுக்கு ஏற்கனவே அவன் அறிந்திருந்ததால் அவன் தற்போது சக்தியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முற்பட்டான்... அதனால் அவனும் அதை கண்டுக்கொள்ளாது இருக்க, சக்தியோ ஷாலு... என அவளை எழுப்ப முயன்றான்... தன் தங்கை உறங்கிவிட்டாள் அவளை எழுப்புவது கடவுளால் கூட முடியாது என அறிந்தவன் அமைதியாய் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்... அதே நேரம் மீனு அவன் சட்டையை இறுக்கமாக பிடிக்க அவள் முகத்தை பார்த்தான்... அதில் அவள் முகம் ரொம்ப பதட்டமாக தெரிய மெதுவாக அவள் தலையை வருடி அவளுக்கு மட்டும் கேட்குமாறு மீனு ஒன்னுமில்லடா தூங்கு என சொல்லி மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டான்... தன்னவன் பரிசமும் வாசமும் அவளைத் தீண்ட அவள் முகத்தில் இருந்த பதட்டம் நீங்கி மெல்லிய புன்னகை மலர்ந்தது... மெல்ல அவள் தூக்கம் கலையாமல் தன் மடியில் படுக்க வைத்துவிட்டு சக்தியை பார்க்க அங்கு அவன் இல்லை ஷாலுவை கீர்த்தியின் மடியில் படுக்க வைத்துவிட்டு அவன் கீழிறங்கி சென்று விட்டான்... சக்தி மச்சான் கிட்ட இதை பத்தி கல்யாணம் முடிஞ்சதுக்கப்றம் பேசுவோம் என நினைத்தவன் மீனுவை ரசிக்க ஆரம்பித்தான்... மெல்ல அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவன் அப்போதே கவனித்தான் மீனு குளிரில் நடுங்குவதை சுற்றி பார்க்க எதுவும் இல்லை... மெல்லிய தூரல் விழுவது போல் தோன்ற மணியை பார்த்தான் அதிகாலை மூனு மணி... அச்சச்சோ மணி மூனா? இவனுங்க வேற இப்பிடி தூங்கிட்டு இருக்காங்களே.. அங்க பொண்ணு ரூமுக்கு போயி யாராச்சும் பார்த்தா என்னாகும் என நினைத்தவன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிவாவை எழுப்ப...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Kde žijí příběhy. Začni objevovat