பயணம் - 17

2.9K 102 4
                                    

நிச்சயம் இனிதே முடிந்தது... எப்படியாவது மீனுவிடம் இன்றே பேசி குழப்பத்தை தெளிவு செய்ய வேண்டும்... என நினைத்து அம்மாவிடம் உதவியை நாடினான்... அனைவரும் பந்தியில் இருக்க சரோ மீனுவின் அறை நோக்கி சென்றான்..  அங்கே மீனுவோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த மனநிலையில் நான் அவனை பற்றி எண்ணிய என்னோட என்னோட்டம் தவறா? இல்லை இப்போது நடப்பது நிஜமா? என்று பல குழப்பத்தின் நடுவே இருந்தாள்.... சரி கீர்த்தியிடம் இதை பற்றி கேப்போம் என்று நினைத்து அவளிடம் திரும்ப அப்போது தான் அவன் வாசலில் ரொம்ப நேரமாக நிற்பது தெரிந்து எழுந்து நின்றாள்.. அவள் கண்களால் தோழியை தேடி கொண்டும் மனதில் அவளை திட்டி கொண்டும் உள்ள வாங்க என்று அழைத்தாள்...

ம் யார தேடுறீங்க? என சரோ வினவ

இல்ல இங்க கீர்த்தி இருந்தா? அவளதான்...

நான் வந்ததுமே அவங்க போயிட்டங்களே...

ஓ சரி நீங்க எதுக்கு வந்தீங்க?

ஏன் நான் வர கூடாதா? என மனதினுள் நினைத்து கொண்டு இல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...

ம் சொல்லுங்க...

எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா வே இல்ல வீட்ல தான் ரொம்ப அடம்பிடிச்சாங்க... அதான் உங்க என சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரோவின் மொபைல் சிணுங்கியது... முதலில் அவாய்ட் செய்தவன் திரும்ப திரும்ப வரவும் அட்டன்ட் செய்து என்ன என்று வினவினான்...

கடைசியாக சரி உடனே வரேன்... என கூறி போன் யை வைத்து விட்டு மீனுவிடம் திரும்பி சாரி ங்க இப்ப நான் உடனே போயி ஆகணும்.. நான் உங்ககிட்ட அப்புறமா பேசுறேன் என சொல்லிவிட்டு சென்றான்...

மீனுவோ அவன் என்ன சொன்னான்? அப்போ அவன் இந்த திருமணத்திற்கு  கட்டாயத்தின் பேரில் தான் சம்மதிதிருப்பானோ? என வழக்கம் போல் இம்முறையும் அவன் ஒன்று சொல்ல வர இவள் ஒன்றாக எடுத்து கொண்டாள்... கடைசியாக மனதினுள் இவன் என் மனதில் உள்ளதை சொன்னால் புரிஞ்சிப்பானா? என சந்தேகம் எழ? அமைதியாய் அமர்ந்தாள்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora