பயணம் - 31

3K 105 7
                                    

சரோ தன்னவளின் பரிஷத்தில் தன்னை மறந்து உறங்கி கொண்டிருந்தான்... மீனு மெதுவாக கண் திறந்து பார்க்க அவள் சரோவின் அணைப்பில் இருந்தாள்... ஏனோ இன்று தன்னவனை விட்டு விலக மனமின்றி தூங்கிக்கொண்டிருந்த சரோவினை பார்த்தாள். அவளுக்கு நேற்று இரவு அவன் தந்த முதல் முத்தம் நினைவுக்கு வர வெட்கப் புன்னகையோடு தன்னவன் நெற்றியில் ஒரு இதழ் பரிசை தந்தாள்...

ஹலோ மிஸ்டர் சரவணன்? இல்ல மிஸ்டர் டீம் லீடர்? நோ மை பிரண்ட்? பிரண்டா? இல்ல மை ஹஸ்பண்ட்? எங்க ஊரு பக்கலாம் ஹஸ்பண்ட் ட மாமா ன்னு தான் கூப்பிடுவாங்க? நானும் அப்டி கூப்பிடவா? மாமா... எனக்கு ஒரு சந்தேகம் அதெப்படி தூங்குறப்ப கூட ஒரு குட்டி ஸ்மைல் உங்க முகத்துலையே இருக்கு?

ம் உண்மைய சொல்லவா பொண்டாட்டி என சரோ கேட்க...

மீனு திடுக்கிட்டு வேகமாக அவனை விட்டு விலக முயன்றாள்... வேகமாக விலகிய தன்னவளை இழுத்து அந்த ஸ்மைல் நீ மாமா ன்னு சொன்னல்ல அதுக்கு....

அச்சச்சோ நான் போறேன் விடுங்க...

நீ உன் கிப்ட் ட தந்துட்ட பட் நான் இன்னும் என் கிப்ட் ட தரலையே? அப்புறம் எப்படி உன்னை விட முடியும்?

நான் என்ன கிப்ட் தந்தேன்... என மீனு யோசிக்க சரோ அவளை இழுத்து கன்னத்தில் ஒரு முத்தத்தை குடுத்து குட் மார்னிங் பொண்டாட்டி...

மீனு அதிர்ச்சியில் இருந்து விலகாமல் இருக்க சரோ இந்த கிப்ட் பத்தலையா? சரி விடு என கூறி அவள் மறு கன்னத்திலும் முத்தம் ஒன்றை தந்து விடுவித்தான்...

தன்னவனின் இந்த திடீர் செயலில் சுதாரித்தவள் அவனை விட்டு விலகி பாத்ரூம்க்குள் புகுந்ததாள்...

குளித்து முடித்து அவள் வெளியில் வந்து பார்க்க அங்கே சரோ இல்லை... மனதினுள் நல்ல வேலை அவர் இங்க இல்ல... என நினைத்து கொண்டு காயத்ரி கொடுத்த புது புடவையை கட்டி கொண்டு கீழே சென்றாள்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now