பயணம் - 14

2.8K 100 5
                                    

சென்னை வந்தவுடன் அனைவரும் அவரவர் கவலையை மறக்க வேலையில் மூழ்கினர்...

இங்கே மீனுவின் வீட்டிலோ மீனு திருமணத்திற்கு சம்மதம் சொன்னதிலேயே அனைவருக்கும் சந்தோசம்... கீர்த்தியும் மீனுவிடம் உண்மையாவே உனக்கு இந்த மேரேஜ் ல சம்மதமா?

என்ன கேள்வி இது? எனக்கு முழு சம்மதம் என மீனு கூற...

உண்மையாவா?

ஏய் ஏண்டி இப்டில்லாம் கேக்குற? உனக்கு என்ன பத்தி தெரியாதா? என்னோட கல்யாணம் என்னோட பேமிலி செலக்ட் பண்ற பைய்யன் கூடதான்னு உனக்கு நம்ம காலேஜ் படிக்கிறப்பயே சொல்லிட்டேன்... இப்ப ஏன் இப்படி கேக்குற?

இல்லடி நீ இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னியே அதான் கேட்டேன்...

ஓ அதுவா? எனக்கு இன்னும் கொஞ்ச நாள் ஒர்க் பண்ணனும்னு நினைச்சேன்... ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் பண்ண கூடாதான்னு தோணிச்சி... வீட்லயும் கேட்டாங்க சரி சொல்லிட்டேன்... என மீனு தெளிவாக கூற...

இதற்கு மேல் இவகிட்ட சரவணன் அண்ணா பத்தி பேசி குழப்ப கூடாது... இவ மனசுல அண்ணா இல்லாத மாதிரி ஒரு வேல அண்ணா மனசுலயும் அப்டில்லாம் இல்லாம இருந்திருக்கலாம்.. நானா ஏதோ தப்பா நினைச்சிட்டு இனி பேச கூடாது என தீர்க்கமாக கீர்த்தி முடிவு எடுக்க

ஒய் கீர்த்தி எண்ணாச்சி? இப்ப உன்னோட சந்தேகம் கிளியர் ஆயிரிச்சா? இல்ல இன்னும் கேள்வி இருக்கா என மீனு கேட்க

ம் சந்தேகம் லாம் இல்ல.. என் பிரண்ட் சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்...என கீர்த்தி சொல்ல

அதற்குள் கல்பனா இருவரையும் சாப்பிட கூப்பிட இருவரும் சென்றனர்...

இங்கே சரோ சிவா இருவரும் நியூ ப்ரொஜெக்ட்  காக ஓய்வுக்கு கூட நேரமின்றி வேலையில்  மூழ்கினர்...

இப்படியே ஒரு வாரம் செல்ல...

ஒரு வழியாக ப்ரொஜெக்ட் ரிப்போர்ட் டை சப்மிட் செய்து விட்டு சிவா சரோ & க்ரிஷ் மூவரும் இன்று ஈவ்னிங் வெளியே போவதாக சொல்ல.. அதற்குள் ஹரிணி சிவா வை அவங்க வீட்டில் உள்ளவர்களுக்கு இன்ட்ரோ கொடுக்க கூப்பிட்டு போக.. க்ரிஷ் ம் வீட்டில் சிறிது வேலை இருப்பதாக கூற சரோ மட்டும் ரிலாக்ஸ் செய்ய பீச்சிற்கு சென்றான்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now