பயணம் - 23

3K 119 11
                                    

மீனு நேரடியாக இதை கேட்பாள் என்று எதிர்பார்க்காத சரவணன் திடுக்கிட்டு திரும்பினான்...

என்ன கேட்ட?

இல்ல உங்களுக்கு பிடிச்ச அந்த பொண்ணு யாரு?

ம் இதை நீ என்னோட ஓய்ப் பா கேக்றியா? இல்ல பிரண்ட்டா கேட்கிறீயா?

ம் ஒரு பிரண்ட் டா கேக்குறேன்...

அப்போ நானும் ஒரு பிரண்ட் டா உன்கிட்ட பதில் சொல்றேன்... சரி இப்ப கேளு... உனக்கு அந்த பொண்ண பத்தி என்ன தெரியனும்?

இல்ல அது அந்த பொண்ணு உங்களுக்கு பிரண்ட் டா இல்ல லவ்.. லவ்வரா?

ம் என்ன பொறுத்த வரைக்கும் அவ எனக்கு லவ்வர் அவளுக்கு நான் ஒரு பிரண்ட்...

மீனுவிற்கு இது ஒன்றும் பெரிய ஷாக் காக இல்லை..  ஏன் அந்த பொண்ணுகிட்ட நீங்க லவ் வ சொல்லலையா?

சொல்லல...

ஏன்?

அந்த பொண்ண பார்த்தேன்... எனக்கு பார்த்தவுடனே பிடிச்சிருச்சி... ஆனா அதை அவகிட்ட சொல்றதுக்கு முன்னாடி இந்த கல்யாணம் நடந்திருச்சி... அதனால என்னால அந்த பொன்னுட்ட என் லவ் வ சொல்ல முடியாம போயிடிச்சி...

அப்போ அந்த பொன்னும் உங்களை லவ் பனறாங்களா?

ம் லவ் பண்ராளான்னு தெரில.. ஆனா அவ மனசுல நான் இருக்கேன்னு தெரியும்...

எப்படி?

அவளுக்கு என்ன வேற பொண்ணுங்க பார்த்தா சுத்தமா பிடிக்காது... அதே மாதிரி வேற ஒரு பொண்ண பத்தி அவகிட்ட நான் பேசுனா அவ கண்ணை பாக்கணுமே கோவத்துல எரிமலையா வெடிக்கும் என மீனுவின் கண்களை பார்த்து கொண்டே சொல்ல...

மீனுவிற்கு கோவத்தில் கண்கள் சிவந்து போதும் ஸ்டாப் இட் சரவணா?

எண்ணாச்சி மீனு?

அவன் அவளை பத்தி தான் கூறுகிறான் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள் கோவம் தலைக்கேறி எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் வேகமா போறீங்களா?

இது பிரண்ட் டா? இல்ல ?

என்ன? என மீனு கோவமாக முறைக்க

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now