பயணம் - 29

3.2K 103 8
                                    

மீனு சரோ மீது கை போட்டு அழகாக தூங்க சரோ அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தூங்க என மறுநாள் விடியல் அழகாகவே ஆரம்பித்தது இருவருக்கும்...

என்றும் இல்லாத சந்தோஷத்தோடு சரோ ஆஃபீஸ் கிளம்ப மீனுவும் கிளம்பி இருவரும் ஒன்றாக ஆபிஸ் சென்றனர்...

மீனு அவள் சீட்டிற்கு செல்ல, சரோ அவன் கேபினுக்கு சென்றான்...

என்ன ஷாம் இன்னிக்கு நித்தி வரலையா?

இல்ல மீனா அவளுக்கு ஏதோ பீவர் னு வரல...

ஓ அதான் சார் காலையிலேயே டல்லா சுத்திட்டு இருக்கீங்களா? என மீனு கேட்க...

அது எப்டி உனக்கு தெரியும்?

ம் அதான் உன் மூஞ்சியை பார்த்தாலே தெரியிதே...

மீனா? இது நீயா இப்டில்லாம் பேசுற? நான் பார்த்த மீனா க்கும் இப்ப பாக்குற இந்த மீனாக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு... உண்மைய சொல்லு நீ யாரையாச்சும் லவ் பண்றீயா?

அதற்குள் சரோ மீனுவை அழைக்க ஷாம் உன்கிட்ட நான் அப்புறமா பேசுறேன்.. இப்ப நான் வந்துர்றேன்.. என சொல்லிவிட்டு சரோவை பார்க்க செல்ல அங்கே அவளுக்கு முன் ஸ்வீட்டி  அவன் கேபினுள் இருந்தாள்...

இங்க பாரு சரோ நான் உன்னை லவ் பன்றேன் அதே மாதிரி நீயும் லவ் பன்ரேன்னு எனக்கு நல்லா தெரியும்...

ஆமா நான் லவ் பன்றேன் என சரோ சொல்ல அதே நேரம் மீனு இந்த உரையாடலை கேட்டு உடனே திரும்பி சென்று விட்டாள்... ஒரு நிமிடம் அங்கு இருந்திருந்தாலும் அவன் காதலி யார் என்று தெரிந்திருப்பாள்... பின் வரும் குழப்பங்களுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய நேரத்தில் ஆரம்ப புள்ளியாக மாறியது இவர்களின் விதி...

அப்புறம் என்ன பிரச்சனை சரோ? என்ன ஏன் அவாயட் பண்ற?

ஆமா நான் லவ் பன்றேன் ஆனா உன்னை இல்ல நான் வேற ஒரு பொண்ண லவ் பன்றேன்...

நான் நம்ப மாட்டேன்...

அது என்னோட பிரச்சினை இல்லை... நான் சொல்றத சொல்லிட்டேன்... அப்புறம் உன் இஸ்டம்... கொஞ்சம் வெளிய போறீயா?

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora