பயணம் - 19

3.1K 103 6
                                    

சரோ மீனு இருவரும் குளித்து முடித்து கீழே வந்தனர்... மீனு சமையலறைக்குள் செல்ல சரோவின் பெற்றோரும் மீனுவின் அப்பாவும் எதையோ சீரியஸாக பேசி கொண்டிருந்தனர். சரோ வருவதை பார்த்த மூவரும் அதான்  நம்ம யாரை பத்தி பேசிட்டு இருந்த்தோமோ அவனே வந்துட்டான் என காயத்ரி சொல்ல

என்னம்மா? என்ன விஷயம்?

ஒன்னும் இல்லப்பா உன் மாமனார் உன்கிட்ட ஏதோ பேசனுமாம் என சரோ அப்பா சொல்ல

என்ன மாமா? என்ன சொல்லணும்?

இல்ல மாப்ள அது வந்து..

ஏன் மாமா என்கிட்ட சொல்றதுக்கு ஏன் இவ்ளோ தயங்குறீங்க? எங்கிட்ட உரிமையா நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம் ...

இல்ல மாப்ள மீனாட்சிக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட அப்டியே குலதெய்வ கோவிலுக்கு வர்றதா நினைச்சிருந்தோம்... நீங்க சரி ன்னு சொன்னா நான் அதுக்கான ஏற்பாட பாப்பேன்

என்ன மாமா? இதுல என்கிட்ட கேட்க்றதுக்கு என்ன இருக்கு? தாராளமா போகலாம்... அப்புறம் மாமா உங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணுங்க என்கிட்ட கேட்கணும்னு எந்த அவசியமும் இல்லை மாமா

இதைத்தான் நாங்களும் சொன்னோம் என சரோவின் பெற்றோர் சொல்ல..

ம் சரி மாப்ள அப்போ இப்பவே அதுக்கான ஏற்பாட பாக்றேன்...

அதற்குள் காபி கப்புடன் மீனாட்சியும் கல்பனாவும் வர...

மீனு அப்பா மாறனை அழைத்து கோவில் செல்வதற்கான ஏற்பாடுகளை பாக்க சொல்ல அதே நேரம் ஷாலுவும் கீர்த்தியும் வந்தனர்...

அண்ணா ஊரை பாத்தியா? சூப்பரா இருக்கு... நானும் கீர்த்தி அக்காவும் வயல் தோப்பு எல்லாமே சுத்தி பார்த்தோம்... அண்ணி உங்க பிரண்ட் உங்களை மாதிரியே ரொம்ப ஸ்வீட்... ஐ சிம்ப்ளி லவ் திஸ் பிலேஸ்...

என்ன ஷாலுமா இந்த ஊரு உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா? அப்போ இங்கயே ஒரு மாப்பிளை பார்த்திடுவோமா? என கல்பனா சொல்ல

எனக்கு டபுள் ஓகே அத்த... என்னப்பா சொல்றீங்க நீங்க?

நான் சொல்றதுக்கு என்னமா இருக்கு நம்ம வீட்ல எல்லாமே உங்க அம்மாதான?

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin