பயணம் - 54

3K 128 22
                                    

மறு நாள் பொழுது அழகாக விடிய இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்பதால் சொந்தகாரர்கள் கூட்டம் ஒரு பக்கமும் திடீரென்று முடிவானதால் அனைவருக்கும் போனிலேயே அழைப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர்...

மீனுவின் அப்பா சரோவிடம் சாரி மாப்பிள்ளை... சம்பந்தி வீட்டுக்கு கூட நேர்ல போயி சொல்ல முடியல தப்பா எடுத்துகாதிங்க மாப்பிள்ளை என சொல்ல

அய்யோ மாமா கல்யாண வேலை எவ்ளோ இருக்கு அதைவிட்டுட்டு இப்போ இதெல்லாம் ஒரு பிரச்சனையா? போங்க மாமா... வீட்ல இப்போ வந்திருவாங்க... எல்லார்கிட்டையும் நான் நேத்தே பேசிட்டேன் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்க.. என சரோ சொல்ல.

ம் அது மாப்பிள்ளை அப்புறம் நேத்து நடந்ததுக்கு அவங்களுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுகிறேன் என அவர் சொல்ல... அய்யோ மாமா அதை நான் நேத்தே மறந்துட்டேன்.. அதை பத்தி நீங்க கவலைபடாதீங்க.. அப்புறம் இதை பத்தி நீங்க வேற யார்கிட்டையும் பேசாதீங்க... என சமாதானம் பண்ணி அவரை அனுப்பிவிட்டு நல்ல வேளை யாரும் கேட்கல என சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்..

ஆனால் யாரிடம் இருந்து மறைக்க நினைத்தானோ அவளே முழுவதையும் கேட்டுவிட்டு அப்படி என்ன நடந்திச்சி அதை ஏன் என்கிட்ட இருந்து மறைக்கனும்னு நினைக்கிறாரு? என யோசிக்க ஆரம்பித்தாள் நம் மீனு...

கல்யாண வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் மூன்று ஜோடிகளும் அவரவர் காதல் விளையாட்டில் இருந்தனர்.... யாரிடம் கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தவளின் நினைவில் இருவர் வந்தனர்.. ஒன்று ரீனா இன்னொருவர் சக்தி... ரீனாவிடம் பொறுமையாக பேசும் அளவுக்கு அவள் மனதில் பொறுமை இல்லை, தன்னவனை மன்னிக்க முடிந்த அவளால் ரீனா செய்த்தை மறக்க முடியவில்லை என்பதே உண்மை... அதனால் அண்ணாவிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என முடிவெடுத்து அவனை தேடிக் கொண்டிருந்தாள்...

சக்தி யாரிடமோ நின்று பேசிக்கொண்டிருந்தான்... அவனருகில் சென்றவள் அண்ணா உங்கிட்ட கொஞ்சம் பேசனும், என சொல்ல

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now