பயணம் - 60

3.4K 148 33
                                    

சுற்றி பூக்களை ரசித்துக் கொண்டிருந்தவன் மீனுவின் முகத்தில் குழப்பத்தை கண்டு... பாரேன் மீனு இந்த இடம் எவ்ளோ அமைதியா எவ்ளோ அழகா இருக்குன்னு... சும்மா மெஷின் மாதிரி ஓடுற நகரத்து  வாழ்க்கையை பார்த்திட்டு இப்படி ஒரு பிளேஸ் பார்க்கிறப்பத்தான் நம்ம வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையான்னு தோணுது... என அவன் பேசிக் கொண்டிருக்க மீனுவோ வேறு யோசனையில் இருந்தாள்... என்ன மீனு? நான் பேசிட்டே இருக்கேன்... பேசனும்னு கூப்டு வந்திட்டு நீ இவ்ளோ அமைதியா இருக்க? என கேட்க

நான் ஷாலுவ பத்தி உங்ககிட்ட பேசணும் என சொல்ல...

ம் ஷாலுவா? அவளுக்கு என்ன என கேட்க...

அவள் ரூமில் சக்தியின் போட்டோ மற்றும் அந்த டைரியை பத்தியும் சரோவிடம் கூறினாள்... நான் நினைக்கிறேன் ஷாலு சக்தி அண்ணா வ லவ் பண்ரான்னு... என திக்கி திக்கி சொல்லி முடித்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க அவனோ கூளாக அந்த ஊட்டி குளிரிலும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்தான்... அதை பார்த்து அவள் முறைக்க... என்ன மீனு உனக்கும் வேணுமா? என கேட்க அதில் கட்டுப்பானவள் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்னன்னா கூல்லா ஐஸ்க்ரீம் சாப்டுகிட்டு இருக்கீங்க என சொல்ல.. அவனோ சிறு பிள்ளை போல் ஐஸ்க்ரீமை சாப்பிட்டிருக்க அதை பார்த்தவள் அவன் சேலை முந்தானை யை வைத்து அவன் வாயை துடைத்து விட்டாள்... இங்க பாருங்க இப்படி விளையாடாம நான் சொல்றத கேளுங்க...

ம் ஓகே மேடம் இப்போ உங்க டவுட் என்ன? ஷாலு சக்தி மச்சான் ன லவ் பண்ராலா இல்லையான்னு தான? என அவன் கேட்க அவள் ஆம் என்பது போல் தலையாட்ட...

ம் ஆமா ஷாலு சக்திய விரும்புறா? அதுவும் ரொம்ப சீரியஸா என மீனுவை பார்த்து சொல்ல...

ம் அப்போ இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?என மீனு கேட்க...

ம் ஊர்ல இருக்கிற லவ் கெல்லாம் நான் சப்போர்ட் பன்றேன்... அப்பிடி இருக்கிறப்ப என் வீட்ல ஒரு லவ் ஸ்டோரி ஓடுறது எனக்கு தெரியாம இருக்குமா? அதுவும் என் தங்கச்சி லவ் க்கு நான் சப்போர்ட் பண்ணாம இருப்பேனா? என கேட்க...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now