பயணம் - 46

3K 143 28
                                    

மறுநாள் பொழுது அழகாக விடிய மீனு மெதுவாக தன் கண்களை திறந்தாள்... அருகில் திரும்பி பார்க்க அங்கே சரோ இல்லை மணியை பார்க்க ஒன்பது என காட்டியது... மணியை பார்த்தவள் பதறி எழுந்திருக்க... ஏய் மீனு பார்த்து மெதுவா என சரோவின் குரல் கேட்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தவள் சரோ இல்லை என தெரிந்ததும் கனவா? என யோசிக்கும் முன்..

மீனு.. என மறுபடியும் குரல் வர ...

குரல் வரும் திசையை நோக்கி கவனிக்க அது அவள் மொபைலில் இருந்து வந்தது என்ன என்று எடுத்து பார்க்க சரோ அவளுக்காக வாய்ஸ் அலாரம் செட் செய்திருக்கிறான்...

மீனு மார்னிங் அர்ஜன்ட் மீட்டிங் இருக்கு... உன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் இருந்தேன் ஆனா நீ நல்லா தூங்கிட்டு இருந்தியா அதான் எழுப்பல... அப்புறம் லேட் ஆயிடிச்சின்னு அவசரமா சாப்பிடாம கிளம்பி வராத... ஒழுங்கா பொறுமை யா கிளம்பி வா நான் ஆல்ரெடி க்ரிஷ் கிட்ட சொல்லிட்டேன்... சோ நோ பிரோப்ளேம்... அப்புறம் ஷாலு க்கு இன்னிக்கு லீவ் தான் சோ அவளே ட்ராப் பண்ணிடுவா?.. சரியா சோ டென்ஷன் ஆகாமா பொறுமையா வா... சரிடா எனக்கு மீட்டிங்க்கு லேட் ஆகுது பாய்....

இதை செட் பண்ண நேரத்துக்கு என்ன எழுப்பி விட்டிருக்கலாம்ல அட்லீஸ்ட் உங்க கூடவே வந்திருப்பேன்.. என மீனு தனக்குள் சொல்ல..

மீனு நீ சொல்றதும் கரெக்ட் தான்... ஆனா உன்னை எழுப்பி இருந்தா நீ தூங்குற அழகை என்னால ரசிக்க முடியாம போயிருக்குமே? அதான் செல்லம் எழுப்பல... சாரி டா பேபி...

ம் அதெப்படி நான் மனசுல இதான் நினைப்பேன்னு தெரியிதோ?

ம் தட்ஸ் கால்டு லவ் பேபி...

ச் இதுவேற.. பர்ஸ்ட் அலாரம் ம ஆப் பண்ணனும்...

மீனு ஒன் செகண்ட் ஆப் பண்ணிராத... ஒன்னு சொல்ல மறந்துட்டிட்டேன்...

என்னவா இருக்கும் என மீனு யோசிக்க...

உம்மா... ஐ லவ் யூ சோ மச் பேபி... மறக்காம நான் கொடுத்தத ஆபிஸ் க்கு வந்து குடித்திடு...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt