episode 01

747 8 0
                                    

வண்ண பட்டாடைகள் அணிந்து சொந்த பந்தங்கள் அனைவரும் கைகூடிய தருணம். அனைவர் முகத்திலும் ஏதோ ஒரு சந்தோசம் அலை பாய்ந்தது..

இவர்கள் இப்படி இருக்க திருமணத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவனோ மணக்கோலத்துடன் தன் முன்னே கொதித்துக் கொண்டிருந்த அக்கினியையே மிஞ்சிவிடும் அளவிற்கு மனதிற்குள் வெம்பிக்கொண்டிருந்தான். அவன் அஷ்வந்த் ( hero) . தன் காதலை தன்னால் அடைய முடியவில்லை என்ற கவலை , ஆத்திரம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. தன் முன்னே நின்று கதைத்துக்கொண்டிருந்த தன் பெற்றோரை தலையை தூக்கி பார்த்தான். அவன் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் அவர்கள் இன்னேரத்திற்கு எரிந்து சாம்பலாகியிருப்பார்கள். அவ்வளவு உஷ்ணம் அதற்கு.

இவனிற்கு அருகில் மணக்கோலத்தில் கண்களில் நீர் வடிந்தோட மனதில் தாங்கிட முடியாத கவலைகளை சுமந்து கொண்டு அழகுப் பதுமை போல் இருந்தாள் ஷ்ரேயா ( heroin) . அவள் மனதில் தன் கவலையை தன்னை பெற்றவர்கள் கூட உணரவில்லையே என்ற வலி நிறைந்திருந்தது. வலி நிறைந்த பார்வையுடன் அவள் தந்தையை ஏறிட்டாள்.

அவள் பார்வையையும் அதன் பின்னால் இருந்த வலியையும் அவள் தந்தை ஈஸ்வரால் உணர முடிந்தது. அவளை பெற்றவரல்லவா மகளின் கவலை அவரிற்கு புரியாமல் போய்விடுமா என்ன? அவளை புன்னகையுடன் பார்த்தவர் "நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு புரியிதுடா கண்ணம்மா . உன் கவலைய நாங்க புரிஞ்சிக்கல்லன்னுதானே நினைக்கிற. உன் கவலை தெரிஞ்சதாலதான் நான் இப்படி பன்றன்டா . இது இப்ப உனக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா நாங்க செய்தது சரின்னு நீ கூடிய சீக்கிரம் புரிஞ்சிப்ப. அப்ப இந்த அப்பாவ தேடி வந்து சொல்லுவடா . அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு " என அவளுடன் மனதால் பேசிக்கொண்டார்.

அவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தவர். கண்ணீரை துடைக்குமாரு அவளிடம் செய்கை செய்தார். அவளோ அவரை ஒரு சிறு முறைப்புடன் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டார். அவள் முகத்திருப்பலையும் , முறைப்பையும் ரசித்தவரின் தோளில் ஒரு கரம் பதிய திரும்பிப் பார்த்தார்.

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now