episode 17

187 2 2
                                    

காலை வேளையில் சூரியன் தன் பொற்கதிர்களை பூமித்தாய் மீது வீச அனைத்து ஜீவராசிகளும் தங்களின் அன்றைய அலுவல்களை செய்வதற்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..

இரவு நெடுநேரம் கழித்து உறங்கியதால் காலை 8.00 மணியளவிலேயே ஷ்ரேயா விழித்தெழுந்தாள்.. இரவு அதிக நேரம் அழுததால் கண்களை சிரமப்பட்டே திறந்தாள்..

நேரத்தை பார்த்ததும் பதறியவள் அவசர அவசரமாக குளித்து உடையை மாற்றிக்கொண்டு கீழே சென்றாள்..

வீடு பார்ப்பதற்கு அலங்கோலமாக இருந்தது .. இரவு அஷ்வந்த் பொருட்களை போட்டு உடைத்ததே இதற்கு காரணம்.. அவனைத்தேட சோபாவில் உடலை குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான் அவன்..

தேவின் அறைக்கு சென்று பார்க்க அவன் ஆபீஸ் சென்றிருந்தான்.. ஷ்ரேயா அவனுக்கு கால் பண்ணான் .

தேவ்: ஹலோ ஷ்ரேயா..

ஷ்ரேயா: ஆபீஸ் போய்ட்டிங்களாண்ணா காபி கூட போட்டு கொடுக்கல்ல சாரிண்ணா அசந்து தூங்கிட்டேன்..

தேவ்: அச்சோ பரவல்லமா நான் இங்க சாப்பிட்டேன் நீ கவனமா இரு என்ன .. நேத்து நடந்த எதையும் மனசுல வெச்சிக்காதடா அஷ்வந்திற்கு ஏதோ டென்ஷன் போல அதான் அப்படி நடந்தான்..

ஷ்ரேயா: நான் எதுவும் நினைக்கலண்ணா அவருதான் எனக்கு எல்லாமே அவரு மேல கோபம் எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட வராது அவரு கூட வாழனூம்னு தான்  ஆர்யனோட நினைவுகள் எல்லாத்தையுமே குழி தோண்டி புதைச்சகட்டேன்.. இப்போ என் மனசுல இருக்குறது அவரு மட்டும் தான்.. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் தாங்கிப்பேன்..

தேவ்விற்கு கணாகள் கலங்கியது .. இவளை போய் ஏமாற்றுகிறானே என அஷ்வந்த் மேல் கொலை வெறி வந்தது ..

ஷ்ரேயா: ஆண்ணா..

தேவ்: ஆஹ் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா நீ இப்படி பேசுறது உன் நல்ல மனசுக்கு நீ ஆசைப்பட்டபடியே அஷ்வந்த் கூட சந்தோசமா வாழ்வ..

ஷ்ரேயா: ரொம்ப thanks அண்ணா..

தேவ்: சரிம்மா அப்போ நான் வெக்கட்டுமா ..  நைட் வீட்டுக்கு வருவேனான்னு தெரிலடா ஒரு கிளைன்ட் மீடிங் இருக்கு.. நான் அவாரதுன்னா உனக்கு கால் பண்ணி சொல்லுவேன் சரியா..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now