episode 26

196 3 2
                                    


ashvanth's office...

அனைவரும் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.. 

அஷ்வந்த் சற்று பிந்தியே வெளியே வந்தான்.. தன் காரின் அருகில் வந்தவன் அதில் ஏறப்போகும் நேரத்தில் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு வந்தாள் ஸ்வேதா..

அஷ்வந்த் அவளை பார்த்தான்.. ஸ்வேதா தலையை தூக்கி அஷ்வந்தை பார்த்தவள் கண்கலங்கியபடி கை எடுத்து கும்பிட்டாள்..🙏🙏😢😢

அஷ்வந்திற்கு ஒரு மாதிரிப்போனது....

ஸ்வேதா கைக்களை கூம்பியபடியே கண்களால் ஷ்ரேயாவை ஏமாற்ற வேண்டாம் என சொன்னவள் கண்களை துடைத்துக்கொண்டு பைக்கில் ஏறி சென்றாள்..

சுரேஷ் ஆபீஸில் இருந்து வெளியாகியவன் ஸ்கூட்டியில் செல்லும் ஸ்வேதாவை பார்த்தான்..☺️☺️  அவள் சென்றதும் அவனும் சென்றான்..

அஷ்வந்த் தன் காரில் ஏறி சென்றான்..


****************************

காரில் சென்றுகொண்டிருந்த அஷ்வந்திற்கு ஸ்வேதா தன்னிடம் பேசியதே நினைவிற்கு வந்தது...

அவனின் மனம் கணத்தது.. அன்று தேவ் அவ்வளவு சொல்லியும் ஷ்ரேயா தன் பக்கம்  நம்பிக்கை கொண்டு பேசியதை நினைத்துப்பார்த்தான்..
அவனை அறியாமலேயே அவன் கண்கள் கலங்கியது.....

அந்த நேரம் அவன் போன் அடிக்க எடுத்துப் பார்த்தான்... சக்தியிடம் இருந்து கால் வந்தது....

அவனுக்கு ஏனோ பேச விருப்பம் இல்லாமல் இருக்க கட் பண்ணி விட்டான்...

சக்தி விடாது கால் பண்ணிக்கொண்டு இருக்க எடுத்துப் பேசினான்...

அஷ்வந்த் : சொல்லு சக்தி ...

சக்தி: எவ்வளவு தடவ கால் பண்றது..

அஷ்வந்த்: சாரி நான் இப்போ தான் ஆபீஸ் விட்டு வெளியானன் அதான் எடுக்கல்ல..

சக்தி : சரி இப்போ எங்க போறீங்க..

அஷ்வந்த்: வேற எங்க வீட்டுக்கு தான்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now