episode 08

219 4 0
                                    


ashvanth's home...

அஷ்வந்த் அறைந்ததில்  ஷ்ரேயா கட்டிலில் அடிபட்டு மயங்கி சரிந்தாள்.. தான் அறைந்ததில் ஷ்ரேயா மயங்கி விழுவாள்  என சற்றும் எதிர்பாராத அஷ்வந்த் அதிராந்துதான் போனான்..

ஷ்ரேயா அருகில் வந்தவன் அவள் தலையை தன் மடியில் தாங்கி அவளை எழுப்ப அவள் எந்திரிக்கவே இல்லை.. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் மீது தெளிக்க அவள் சற்றும் அசையவில்லை...

அஷ்வந்திற்கு பதட்டம் அதிகமாக என்ன செய்வது என்று விளங்கவில்லை.. அவள் தலையை பிடித்து எழுப்ப அவன் கையில் ஏதோ ஈரலிப்பாக இருப்பதை போன்று உணர கையை தூக்கி பார்த்தவன் இன்னும் அதிர்ந்து போனான் ..

அவன் கையில் ஷ்ரேயாவின் குருதி பட்டிருந்தது .. ஷ்ரேயாவின் தலையை பார்க்க அவள் பின் தலையிலும் குருதி கசிந்து கொண்டிருந்தது..

அவளை கையில் ஏந்திக்கொண்டவன் அவசரமாக தன் காரை கிளப்பிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றான்...

வைத்திய சாலைக்கு சென்றதும் டாக்டர் ஷ்ரேயாவை அறைக்குள் அழைத்துச்சென்றனர்..

அஷ்வந்திற்கு குற்ற உணர்வாக இருந்தது ..  என்னதான் அவளை விரும்பி கைகோர்க்கவில்லை என்றாலும் தற்போது அவள் இவனின் மனைவியல்லவா...

அஷ்வந்த்: ஐயோ என்னடா இப்படி பண்ணிட்ட .. என்னதான் இருந்தாலும் அவள் இப்ப உன் வைஃப் இல்லையா.. உனக்கு விருப்பம் இல்லேன்னாலும் நடந்த கல்யாணம் பொய் ஆகிடுமா.. உன்னை நம்பி வந்தவள இப்படி பண்ணிட்டியேடா.. அவங்க அம்மா அப்பா எல்லாம் அவள் மேல எப்படி பாசம் வெச்சிருக்காங்க .. அவங்களுக்கு இது தெரிஞ்சா எவ்வளவு ஃபீல் பண்ணுவாங்க.. பாவம் டா அவள்😢😢..  என மனதால் கவலை பட்டான்..

அந்த நேரம் பார்த்து அஷ்வந்தின் ஃபோன் சினுங்கியது.. யாரென்று பார்க்க சக்தியிடம் இருந்து கால் வந்துகொண்டிருந்தது .. அஷ்வந்திற்கு ஏனோ அவளுடன் பேச மனம் இடம் கொடுக்க வில்லை.. ஆன்ஸ்வர் பண்ணாமல் அப்படியே விட்டான்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now