episode 7

222 4 0
                                    

Cemetery(மயானம்)....

ஷ்ரேயா: ஏன்டா ஏன்டா என்ன விட்டு போன..  நீ போனத்துக்கு அப்பறமா அம்மா , அப்பா எனக்கு வேற கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க  டா உனக்கு தெரியுமாடா??😭😭 உன்ன புருஷனா நினைச்ச மனசுல எப்படிடா இன்னொருத்தர என்னால நினைக்க முடியும்??
மனசுல உன்னை நினைச்சிட்டு வெளில ஒரு பொய்யான வாழ்க்கைய வாழ்றன் டா... பாவி பாவி😭😭😭 நீ இங்க நிமாமதியா தூங்கிட்டு இருகாகேல்ல...

நானும் உன் கூடவே வந்துற்றேன் டா... என கதறி அழுதாள்...

ஆர்யனின் ஆன்மாவும் கதறி அழுதது.. நான் உன் கூட தான்டி இருக்கேன் அழாத என அது கத்திய சத்தம் ஷ்ரேவிற்கு எட்டவில்லையோ என்னவோ... அவள் கண்ணீரை துடைக்க முயன்று முடியாமல் போக... தன் சக்தி மூலம் அருகில் இருந்த மரத்தை காற்றினால் அசைக்க அதில் இருந்து பூக்கள் அவள் தலை மேல் விழுந்தது ..

ஷ்ரேயா: அழாதன்னு சொல்ல வற்றியா.. அதை சொல்ல உனக்கு தகுதி இல்லை டா.. என்ன தவிக்க தவிக்க விட்டு போன நீ எப்படி என்ன அழாதன்னு சொல்ல முடியும்... என கதறினாள் 😭😭.. அவள் தோளை தொட்டது ஒரு கரம்.. திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்தான் தேவ்...

தேவ்: அண்ணா... 😢😢..

தேவ்: அழாதடாம்மா.. காலைல நான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா.. இப்போ இப்படி அழுதா என்னடா அர்த்தம்.. 😢

ஷ்ரேயா: என்னால முடிலண்ணா.. என்னால எப்படி இவன மறக்க முடியும்?? மறக்கக்கூடிய நினைவுகளையா இவன் தந்துட்டு போனான்...
இவன் என் உசுருல பாதிண்ணா.. உங்களுக்கே தெரியும் ல .. நான் வேணாம் வேணாம் னு போகும் போது விரட்டி விரட்டி வந்தவன் இப்போ நான் வேணும் னு சொல்லும் போது வரவே முடியாத தூரத்துக்கு போய்ட்டானேணா...😭😭😭..

தேவ்: அழாத மா.. அவன் உடம்பு தான் இங்க இருக்கு அவன் நினைவு பூரா உன்ன சுத்தித்தாம்மா வரும்.. என தன் நண்பனை பற்றி முழுவதும் அறிநாதவனாக கூறினான்..

நண்பனின் புரிதலான பேச்சில் ஆர்யனின் ஆத்மா ஒரு நிமிடம் பூரித்து தான் போனது..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now