episode 23

160 5 2
                                    

Call 📲📲📲...

அஷ்வந்த் : ஹலோ

🧔: சார்  நான் நம்ம கம்பனில இருந்து இன்னைக்கு அந்த சப்ளை பண்ண வேண்டிய பொருள் எல்லாம் லாறில ஏத்திட்டு  போனன் சார்..

அஷ்வந்த்: ஆமா இன்னெக்கு அதை கொடுக்கனும்னு ரகு கிட்ட சொன்னேன்.. என்ன எல்லாத்தையும் பத்திரமா கொண்டு போய் சேத்தாச்சா??

🧔: அ.. அது வந்து அதுல ஒரு சிக்கல் சார்..

அஷ்வந்த்: என்ன என்னயா சிக்கல்..

🧔: நான் வந்துட்டு இருந்தப்போ வழில போலீஸ் மறிச்சு வண்டிய செக் பண்ணணும்னாங்க சார்..

அஷ்வந்த்: சரியா சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சிட்டு பொருள  கொண்டு போய்  உரிய இடத்துல சேத்துடு புரியுதா..

🧔: ஐயோ சார் சொல்றத கேளுங்க.  வண்டிய மறிச்சு செக் பண்ணிட்டு உள்ள கஞ்சா இருக்குன்னு சொல்றாங்க சார்..

அஷ்வந்திற்கு இடியே விழுந்தது..

அஷ்வந்த்: என்னயா சொல்லுற..

🧔: ஆமா சார் கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. இல்லை என்னை தூக்கி உள்ள வெச்சிடுவேன்னு மிறட்டுறாங்க சார்..நான் புள்ள குட்டி காரன் தயவு செய்து வாங்க சார்..

அஷ்வந்த் : சரிய்யா பதறாத நான் வர்றேன்..

::::::::::::::::💝::::::::::::::

போலீஸ்: என்னையா உன் எம்.டி வர்றேன்னான் இன்னும் ஆள காணோம்.. 🤨  அவன் மட்டும் வரல மவனே நீ  இன்னைக்கு செத்தடி.

🧔: சார் என் எம்.டி  இப்போ வந்துருவாரு கொஞ்சம் பொறுமையா இருங்க சார்..

போலீஸ்: என்ன என்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சியா.. உன் கேசை மட்டும் பாக்க.. இது எல்லாம் சரி பட்டு வராது நட ஸ்டேஷனுக்கு..

🧔: கொஞ்சம் கருணை காட்டுங்க சார் .. வண்டிக்குள்ள நாங்க எங்க சப்ளை பண்ணுற பொருட்களை மட்டும் தான் ஏற்றினம்.. நீங்க கஞ்சா இருக்குன்னு சொன்னதை என்னால இன்னும் நம்ப முடியலை.. எங்க எம்.டி அப்படி பட்டவரில்லை..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now