episode 22

176 3 2
                                    

அத்தியாயம் - 22..

Ashvanth's office...

அஷ்வந்த் அன்று ஆபீஸிற்கு வரவில்லை.. இன்று அன்த கம்பனி ஆடரிற்கான பொருட்களை அவர்களுக்கு சப்ளை பண்ணும் நாள்...

அஷ்வந்த் வராதது சுரேஷிற்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.. அந்த பொருட்களை அந்த கம்பனிக்கு கிடைக்க கூடாது என நினைத்தான்..

பொருட்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.. அங்கு ரகு நின்று பொருட்களை சரி பார்த்துக்கொண்டு இருந்தான்..

சுரேஷிற்கு கோவமாக இருந்தது இருந்தும் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் அருகில் சென்றான்..

ரகு: வாடா சுரேஷ்..

சுரேஷ்: என்னடா எல்லாம் சரியா இருக்கா..

ரகு : ஆமாடா அதை தான் செக் பண்றேன் இன்னும் இரண்டு கம்பனி ஆடர் கேட்டிருக்காங்க அந்த விசயாமாவும் போய் பாக்கனும்..

சுரேஷ்: நீ போய் அதை கவனிடா நான் இதை பாத்துக்குறேன்..

ரகு: இல்லைடா நான் பாத்துக்குறேன் முன்னாடியும் சொதப்பிருச்சு இப்பவும் சரியா போய் சேரலேன்னா அஷ்வந்த் சார் என்னை வேலையை விட்டே தூக்கிடுவாரு...

சுரேஷ்: நான் பாக்குறேன்டா என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு..

ரகு: அப்படி சொல்லலடா..

சுரேஷ்: அப்பறம் என்ன எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் தைரியமா போ..

ரகு: சரிடா.. ரொம்ப தேங்க்ஸ் டா...

சுரேஷ்: ஒன்னா வேலை பாக்குறோம் நமக்குள்ள உதவி பண்ணலன்னா எப்படி.. நீ தைரியமா போ.. நான் இதை அனுப்பிட்டு உனக்கு போன் பண்ணி சொல்றேன்..

ரகு: சரிடா..

ரகு அங்கிருந்து சென்றதும் சுரேஷ் விசமமாக சிரித்துக்கொண்டான்..

முன்னால் இருந்த பெட்டிகளை இறக்கிவிட்டு அதற்கு பதிலாக கஞ்சா போன்ற போதைப்பொருட்களுடனான பெட்டிகளை ஏற்றினான்..

அனைத்தையும் பக்காவாக முடித்துவிட்டு லாறியை அனுப்பிவைத்தான்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now