episode 44

177 4 2
                                    


ஷ்ரேயா அதிர்ச்சியில் இருந்தாள்.. அவளுக்கு பேச்சு வரவே இல்லை..  உறைந்து போய் அவனையே பார்த்த படி நின்றாள்..

அஷ்வந்த்: என்ன பேச்சு வரமாட்டேங்குதா??

ஷ்ரேயா 😨😢😢

அஷ்வந்த்: எனக்கு எல்லா விசயமும் தெரியும்.. நீயும் ஆர்யனை சின்சியரா லவ் பண்ணது.. அவன் ஒவ்வொரு நாளும் இம்ப்ரஸ் பண்ணது.. அன்னைக்கு ஆர்யன் குடி போதைல ஒன்னா இருந்தது.. நீங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போனது.. அவன் ஆக்சிடன்ட் ல செத்தது..ஆல் டீட்டைல்ஸ் ஐ நோ...

ஷ்ரேயா: ஷ்ரேயாவிற்கு அவன் இடையில் கூறியது அதிர்ச்சியாக இருந்தது.. 😭😭..

அஷ்வந்த்: என்னடி பேசிம நிக்குற.. என்ன நம்ம வன்டவாளம் எல்லாம் மலையேறிடிச்சுன்னு  பேச்சு வரல்லயா??

ஷ்ரேயா கண்ணீரை துடைத்தவள்..

ஷ்ரேயா: இங்க பாருங்க.. நான் ஆர்யனை லவ் பண்ணது உண்மைதான் நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போனதும் உண்மைதான். அவன் ஆக்ஸிடென்ட் ல இறந்ததும் உண்மைதான்.  ஆனா நாங்க ஒன்னா இருந்ததுன்னு சொன்ன விசயம் சுத்த பொய்ங்க.. இது கடவுளுக்கே அடுக்காது...

அஷ்வந்த்: பொய் சொல்லாதடி.. அது எப்படிடி.. எல்லாமே உண்மை அது மட்டும் பொய்யாகும்?? நீ இந்த மாதிரி சொல்லுவேண்ணு நான் எதிர்பார்த்தேன்டி...

ஷ்ரேயா: ஐயோ கடவுளே நான் எப்படி புரிய வைப்பேன் 😭😭.  நான் அந்த மாதிரி பொண்ணு இல்லேங்க.. அப்படி ஏதாவது நடந்திருந்தா நான் கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன் தயவு செய்து நம்புங்க.. இது உங்க குழந்தைதாங்க.. அனியாயமா அந்த உசுர சந்தேகப்படாதீங்க😭😭😭😭...

அஷ்வந்த்: அப்போ ஏன்டி நீ இவ்வளவு நாளும் ஆர்யன் விசயத்தை என் கிட்ட சொல்லல்ல..😠😠

ஷ்ரேயா: நான் உங்க கிட்ட சொல்ல பல முறை ட்ரை பண்ணிருக்கேன்.. ஆனா நான் பேச வந்தா என்கிட்ட பேசாம மூஞ்சை திருப்பிக்கிட்டு போய்டுவீங்க.. அதானால தான் நான் சொல்லல்ல😭😭😭..

அஷ்வந்த்: ப்பாஹ்.. சான்சே இல்லை.. உன்னை மாதிரி பொண்ணால எப்படிடி இப்படி டக்கு டக்குன்னு கதை கிரியேட் பண்ண முடியுது??

கன்னம் நனைத்த கண்ணீர்حيث تعيش القصص. اكتشف الآن