episode 13

217 4 2
                                    

காலைப்பொழுது இனிதே மலர சூரியனின் பொற்கதிர்களின் உதவியினால் விழித்தெழுந்தாள் ஷ்ரேயா..

எழுந்தவள் குளித்துவிட்டு இளம் நீல நிற டாப் மற்றும் கரு நீல நிற பேன்ட்டை அணிந்துகொண்டு முடிகளை கிள்ப் ஒன்றின் உதவியினால் அடக்கிக்கொண்டு தன் சட்டைக்குள் மறைந்து இருந்த  மாங்கல்யத்தை வெளியில் எடுத்து போட்டு தன் உச்சி வகுட்டில் குங்குமத்தை வைத்துக்கொண்டாள்..

இன்று அவள் மனம் தெளிவாகவும் இலேசாகவும் இருப்பதாக உணர்ந்தாள்..  தன் கைப்பையயை எடுத்துக் கொண்டு காரை எடுத்துக்கொண்டு சென்றாள்...

...................

Cemetery(மயானம்)....

வீட்டிலிருந்து  ஷ்ரேயா நேராக வந்தது ஆர்யனின் சடலம் இருக்கும் மயானத்திற்கே..

காரை விட்டு இறங்கி நடந்து வந்தவள் அவன் கல்லரையின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.. அதில் இருந்த ஆர்யனின் புகைப்படம் பார்க்க அவள் கண்கள் கண்ணீரை சொரிய மறக்கவில்லை..

ஷ்ரேயா: ஆர்யன் நான் இப்போ உன் கூட சண்டை போட வரல்ல .. ஏன்டா போனன்னு இனி உன்னை கேட்டு தொந்தரவு பண்ண மாட்டேன்.  உருகி உருகி காதலிக்க வரம் தந்த அந்த கடவுள் ஒருநாளாவது நம்ம சேந்து வாழ்றதுக்கு வரம் கொடுக்கல்லையே..😢😢..
ஒரு நாளாவது உன் கூட வாழ்ந்திருந்தேன்னா கூட நம்ம காதல் முழுமை அடைந்திருக்கும்..
நம்ம விதி நம்மள சேர விடாம பண்ணிருச்சு..

தெரிஞ்சோ தெரியாமலோ நான் இப்போ இன்னொருத்தருக்கு சொந்தம் ஆகிட்டேன்.. மனசுல உன்னை நினைச்சுகிட்டு அவர்கூட ஒரு பொய்யான வாழ்க்கையை தான் நான் இது வர வாழ்ந்துட்டு இருக்கேன்.. இனி அப்படி வாழ்றது சரி இல்லை.. அவரு எனக்கு எவ்வளவு உண்மையா இருக்காரு.. என் விருப்பத்தை மீறி அவரு எங்கிட்ட நடந்துக்கிட்டதே இல்லை.. இப்படி இருக்குறவருக்கு என்னால இதுக்கு மேல துரோகம் பண்ண முடியாது.. இந்த ஞென்மத்துல அவரு தான் என் லைஃப், எல்லாமே.. அடுத்த ஞென்மத்துலயாவது நான் உன் கூட சேந்து வாழனும்டா.. ப்ளீஸ் 😭😭😭..
என கதறியவள் தன் பையிலிருந்து ஆர்யன் அவளுக்கு lv பண்ணும் போது கொடுத்த கிப்ட்ஸ், இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோஸ் எல்லாவற்றையும் அவன் கல்லறை மேல் வைத்து விட்டு எழுந்து சென்றாள்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now