episode 14

196 3 2
                                    

shvetha's home.....🏘️

ஸ்வேதா ஆபீஸ் போவதற்கு ரெடி ஆகிக் கொண்டு இருந்தாள் .. அவள் மனம் முழுவதும் அன்று அவள் பீச்சில் பார்த்த காட்சியே ஓடிக்கொண்டிருந்தது.. அஷ்வந்த் மீது செம்ம கோபம் வந்தது..

ஸ்வேதா: ச்சி என்ன மனிசன் இவரு கட்டுன பொண்டாட்டி இருக்கும் போது இன்னொருத்தி கூட  இப்படி நெருக்கமா இருக்காரே.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா..  இவர போய் நல்லவரு உத்தமன் காந்தின்னு எல்லாம் சொன்னனே என் வாயை சுண்ணாம்பு போட்டுதான் கழுவனும் ..😠😠 அன்னைக்கே இரண்டு அறை அறைந்து நாக்க புடுங்குற மாதிரி கேக்கனும் னு நினைச்சேன் .. ஷ்ரேயா இருந்ததால ஒன்னும் பண்ண முடியாம போச்சு..

இன்னைக்கு எப்படியாவது அவரு கூட பேசியே தீரனும் ..  சட்டைய பிடிச்சு நறுக்குன்னே  நாலு வார்த்தை கேக்குறேன்.  ஷ்ரேயா பாவம் இது பத்தி தெரிஞ்சா தாங்கவே மாட்டாள்..  அவளோட பாஸ்ட் லைஃப் அ பத்தி சொல்லியாவது இவங்க இரண்டு பேரையும் சேத்து வெச்சிடனும்..
என முடிவெடுத்தவளாய் ஆபீஸை நோக்கி சென்றாள்..

ashvanth's office.....

இன்ட்ரவியுவை முடித்து விட்டு வந்த சுரேஷின் போன் ஒலிக்க அதை எடுத்துக்கொண்டு வெளியே வந்து பேசினான்...

அவள்: என்ன அண்ணா எல்லாம் ஓகே வா செலெக்ட் ஆகிட்டியா...

சுரேஷ்:  ஆமாம்மா  சுரேஷ்னா சும்மாவா.. எப்படி பேசுனா அஷ்வந்துக்கு புடிக்குமோ அப்படி பேசினேன் .. என் பேச்சுலயே அவனுக்கு என்னை புடிச்சு போச்சு.. இனி என் குவாலிபிகேஷன் எல்லாம் பாத்து நாளைக்கே வந்து ஜொயின் பண்ணிக்க சொல்லிட்டான்..

அவள்: வாவ் சூப்பர் அண்ணா.. அண்ணாண்ணா அண்ணா தான் 🤩😘😘❤️

சுரேஷ்: இனிமே பாரு என் ஆட்டத்தை அஷ்வந்த் கூடவே இருந்து ஷ்ரேயாகிட்டயும், அந்த சக்தி கிட்டயும் இருந்து இவனை பிரிக்கிறேன் ..

( ஆமாங்க அஷ்வந்திற்கு கால் பண்ணறது வேற யாரும் இல்லை சுரேஷ் தான்)

அவள்:  சரின்னா ஜாக்கரதை நீ பேசுறது யாருக்காவது கேட்டுட போகுது வீட்டுக்கு வந்து பேசிக்கலாம் நான் வெச்சிற்றன்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now