episode 67

172 4 2
                                    


ஷ்ரேயாவிற்கு அஷ்வந்த் குதித்ததை நினைக்க ரொம்ப பயமாக இருந்தது... அவளின் இதயம் வேகமாக துடித்ததது...உடலும் நடுங்கியது

அவளை அணைத்திருந்த அஷ்வந்திற்கு அவளின் இதயதுடிப்பு தெளிவாக கேட்டது..  அவளின் பயத்தை உணர்ந்தான்..

அஷ்வந்த்: ஷ்ரேயா...

ஷ்ரேயா: ரொம்ப பயந்துட்டேங்க... நீங்க கிடைக்காம போயிருந்தா என்ன பண்ணிருப்பேன்😭😭..

அஷ்வந்த்: ஐயோ அழாத ஷ்ரேயா.. அதான் எனக்கு ஒன்னும் ஆகலேல்ல.. அப்பறம் ஏன் பயப்படுற...

ஷ்ரேயா: தயவு செய்து இனிமே இந்தமாதிரி எதுவும் பண்ணிடாதீங்க.. என்னால தாங்க முடியாது..

அஷ்வந்த் அவள் காதலில் உடல் சிலிர்த்து போனான்.. அவளை இறுக அணைத்துக்கொண்டான்..

அஷ்வந்த்: என்னை இந்தளவு விரும்புறியாடி... நான் என்னடி இது வரை உனக்கு பண்ணிருக்கேன்😭😭  ..  இந்தளவு விரும்புற உன்னை எப்படி எல்லாம் கஷ்டப்படுத்திருக்கேன்...

ஷ்ரேயா: அழாதங்க😭😭..

அஷ்வந்த்: லவ்னா என்னன்னே தெரியாதவள் மேல உயிரையே வெச்சேன்.. எனக்கு அவள் துரோகம் பண்ணிட்டாள்... கடைசி வர எனக்கு உன்மையா இருந்த உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனே.. 😭😭😭.. அவள் நல்லவளில்லை ன்னு தெரிஞ்சதும்தான் நீ பட்ட வேதனை எனக்கு புரிஞ்சிது ஷ்ரேயா..

ஷ்ரேயா: வேதனைன்னு சொல்ல முடியாது.. ஒவ்வரு நிமிசமும் செத்து செத்து பிழைச்சேன்😭.. நீங்க சில நேரத்துல குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருக்கும் போது கூட அவளை நினைச்சு பொலம்புவீங்க..  அந்த நேரம் எல்லாம் என்னால தாங்க முடியாம இருக்கும்.. 😭

ஷ்ரேயா: அவள் மேல உயிரையே வெச்சிருந்தேன் ஷ்ரேயா.  ஆனா அவள் எனக்கிட்ட இருக்குற பணத்தை தான் விரும்பிருக்காள்.. அவளுக்கும் அவள் மாமா பையனுக்கும் எப்போவோ எங்கேஜ்மென்ட் முடிஞ்சு போச்சு...

ஷ்ரேயா அதிர்ந்து போனாள்...

ஷ்ரேயா: என்னங்க சொல்லுறீங்க...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now