episode 68

159 4 0
                                    


மீரா அதிர்ந்தெழுந்தாள்..

தேவ்: அவளை பார்த்தான்..

மீரா அதிர்ச்சி மாறாமல் நின்றாள்.  அவள் கண்கள் கண்ணீரை வெளிவிட்ட படியே இருந்தது...

தேவ்: அவளை தன் அருகில் இருத்தியவன்.. ஏன் இப்போ அழற..

மீரா: இ.. இல்..இல்லை.. நா.  நான் 😭😭..

தேவ்: அழாதடி... இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு அழற..

மீரா: உங்களுக்கு என் மேல கோபம் வரல்லயா...😭😭

தேவ்: எதுக்கு கோபப்படனும்..

மீரா: உஙாகளை ஏமாத்திட்டனே..,😭😭😭

தேவ்: ஐயோ போதும் அழாதடி... எனக்கு எல்லாமே தெரியும் ..  நீ ஒரு வாட்டி ஆபீஸ்ல டயரி எழுதிட்டு அப்படியே அதை அங்கேயே மறந்து விட்டுட்டு போய்ட்ட... நான் உன் இடத்துல வந்து பாத்தப்போ அது இருந்திச்சு... அதை எடுத்துட்டு போய் படிச்சேன்.. ஆரம்பத்துல கண் எல்லாம் கலங்கி போச்சு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு.. என் அம்மாவோட இடத்துல வெச்சி பார்த்த நீ என்னை ஏமாத்துறத நினைச்சதும் மனசு நொறுங்கிப்போச்சு..
பாதிய படிச்சிட்டு மூடி வெச்சுட்டேன்..

அன்னைக்கு ஈவினிங் நாம வெளில போனோம்.  உன்னை பார்க்க எனக்கு கோபம் தான் வந்திச்சு அப்படியே அறையனும் போல இருந்திச்சு.. ஆனா நீ அன்னைக்கு என் மேல காட்டின அன்புல ஒரு தாயோட அன்பு  இருக்குறத என்னால உணர முடிஞ்சது.. உன்மையான காதலை உணர்ந்தேன்.  உன் கண்ணுல எனக்கான உன்மையான அன்பை பார்த்தேன்... அதனால உங்கிட்ட அதை பத்தி கேட்க ஏனோ தோனல .

அடுத்த நாள் முழுசா அந்த டயரியை படிச்சு முடிச்சேன்.. கடைசில நீ என்னைஉன்மையிலேயே விருமாபுறதாகவும், என்னை உன் குழத்தை மாதிரி எப்படி எப்படியெல்லாம் பாத்துக்கனும்னு நீ எழுதினதை வாசிச்சப்போ அழுகை தான் வந்திச்சு. உன்னை அன்னைக்கே எனக்கு சொந்தமாக்கிக்கனும் போல இருந்திச்சு... உன் அன்பை நான் அனுபவிக்கனும் போல இருந்திச்சு..
அதனால தான் ஷ்ரேயா, அஷ்வந்த் ப்ராப்ளம்ஸ் முடியிரதுக்கு முன்னாடியே நம்ம கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்பட்டேன்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now