episode 20

175 3 2
                                    


அத்தியாயம் - 20..

அஷ்வந்த் காலையில் எழுந்து குழித்து விட்டு ரெடியாகிக்கொண்டிருந்தான்..

ஷ்ரேயா காபி போட்டு டேபிளில் வைத்து விட்டு சென்றாள்... அஷ்வந்த் அதை பார்த்தவன் எடுத்து குடித்தான்..

கீழே வர ஷ்ரேயா டைனிங் டேபிளில் அவனுக்காக சாப்பாடு எடுத்து வைத்தாள்.. ஷ்ரேயா அவனை சாப்பிட வருமாறு அழைக்கவில்லை.  அவனுடன் சென்று பேசினால் திட்டுவானோ என பேசாமலே இருந்தாள்..

அஷ்வந்த் வந்தன் டைனிங் டேபிளில் அமர்ந்தான்.. ஷ்ரேயா சாப்பாடு எடுத்து வைக்க சாப்பிட்டான்..

சாப்பிட்டு முடித்தவன் அவளிடம் எதுவும் சொல்லாமல் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்..

ஷ்ரேயாவகற்கு மனம் கனமாக இருந்தது.. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ரெடியாகிக்கொண்டு கோயிலுக்கு சென்றாள்..

:::::::::::::::::🖤:::::::::::::::::

அஷ்வந்த் நேராக ஹாஸ்பிடல் வந்தான்..
அன்று சக்தியை டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தது.. டாக்டர் ஒரு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று கூறினாலும் அஷ்வந்த் அவள் வீட்டிற்கு சென்றால் ஓய்வெடுக்கமாட்டாள் என்பதற்காக டாக்டரிடம் இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க இன்று டிஸ்சார்ஜ் செய்தனர்..

அஷ்வந்த் ச்தியை அவள் வீட்டிற்கு கூட்டிவந்தான்..

சக்தி: ஹப்பா இப்போதான் நல்லா இருக்கு அந்த ஹாஸ்பிடல் ஸ்மெல்லே எனக்கு பிடிக்கல..

அஷ்வந்த்: சரி போய் ப்ரஷ் ஆகிட்டு வா வெளில போகலாம்..

சக்தி சோபாவிலேயே போனை வைத்து விட்டு சென்றாள்..

அந்த நேரம் அஷோக்கிடம் இருந்து மெஸேஜ் வந்தது.. அஷ்வந்த் யார் என்று பார்க்க அசோக் என்று பதிந்து வைத்திருந்த நம்பரில் இருந்து வந்திருப்பதை பார்க்க அவனுக்கு புரியவில்லை...

சக்தி வந்ததும் கேட்கலாம் என நினைத்து இருந்தான்.. அவனுக்கு சக்தியை சந்தேகப்பட தோன்றவில்லை..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now