எனக்கு அமர்தான் சொன்னான்.
ஆனால் அவன் கிட்ட கேட்டேன் அவளோட பெயரை கூட என்கிட்ட சொல்லவில்லை.
ஒரு விஷயம் சொன்னான் அவ ரொம்ப நல்ல பெண்-னு.
லக்கி தீபாவோட முகத்தை பார்க்கிறான்.
அவளோட கண்கள் உண்மையை தான் சொல்கிறது-னு புரியுது.
தீபா நல்ல பெண்தான் ஆனால் மிகவும் கோபம் வரும்.
அவளோட கோபத்தை இரண்டு பேர் மட்டும்தான் குறைக்க முடியும்.
லக்கி அப்பறம் அமர்.
லக்கியோட உயிர் தோழன் அமர்.
தீபா, அமர் நட்போடு பழகினாங்க காலப்போக்கில் காதலாக மாறிவிட்டது.
பெரியவங்கள எல்லாரும் அவங்க படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்தவுடன் திருமணம்−னு முடிவா சொல்லிவிட்டாங்க.
