எனக்காக 7

395 16 5
                                    

கௌசிக் கோவை வந்து சேர்ந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.

அன்று அவர்களது உரையாடலுக்குப் பிறகு அங்கு கம்பனிகளில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு எல்லா பொறுப்புகளையும் கேசவன் மற்றும் அர்ஜுன் அவர்களிடம் பார்க்க சொல்லிவிட்டு பதினைந்து நாட்களில் அங்கிருந்து கோயம்புத்தூர் கிளம்பினான் நம் கௌசிக்.

அவன் இங்கு வருவதற்குள் அந்த வீட்டை தன் பெயரில் அல்லாது தான்வியின் பெயரிலேயே வாங்க சொல்ல பாட்டியும் அவனை மறுத்து பேசவில்லை, அவருக்கு அவன் அங்கு செல்லவதே பெரிது என்ற எண்ணத்தில்.

ஏர்போர்ட்டிலேயே விஷ்ணு (அகியின் நண்பன்) கௌசிக்கை வரவேற்க வந்து விட்டான்.

அவனது கண்கள் கௌஸிக்கை ஆர்வத்தோடும் பிரமிப்பு பார்த்துக்கொண்டிருந்தது. அவனும் அகியும் காலேஜ் மேட்ஸ். அகி கௌசிக்கின் திறமை பற்றி இவனிடம் சொல்ல சொல்ல இவனுக்கு கௌசிக் ஒரு ஹீரோ போலவே மாறிவிட்டான்.

அகிலன் விஷ்ணுவின் கம்பனியில் கௌஸிக்கிர்க்கு வேலை வேண்டும் என்று சொன்னவுடன் அப்படி ஒரு சந்தோஷத்துடன் தலை அசைத்தான், இதோ இன்று ஏர்போர்ட்டில் ஒருமணி நேரத்திற்கு முன்பே வந்து அவனை அழைத்துகொண்டு செல்கிறான்.

காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது தனது அருகில் மொபைலை பார்த்துக்கொண்டிருந்தவனை இவர் ஏதும் தன்னிடம் பேசமாட்டரா? என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

மொபைலில் இருந்து நிமிர்ந்த கௌசிக்,

மிஸ்டர். விஷ்ணு..

சொல்லுங்க அண்ணா..? ம்ம் அண்ணானு கூப்பிடவா? என்று தயங்கிக்கொண்டே கேட்க, முகத்தில் சிறு புன்னகையுடன் தலை அசைத்தான்.

ஆனா ஆபீஸ்ல என்னை கௌசிக்கென்றே கூப்பிடுங்க.

பரவாயில்ல அண்ணா, நான் அண்ணனே...

நோப், ஆபீஸ்ல நீங்க MD.. அதனால் இடத்திற்கு தகுந்தாற்போல நமது பேச்சும் இருப்பதே சரி என்று கண்டிப்புடன் சொல்ல..இவன் தலை வேகமாய் அசைந்தது.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now