எனக்காக 3

544 17 1
                                    

Flashback...

காலங்கள் இப்படித்தான் வேகமா போய்ட்டு இருந்துச்சு... கௌஷிக் பிறந்த இரண்டு வருஷத்துல ரஞ்சனியோட தாத்தா இறந்துட்டாரு...

நீ பிறந்த கொஞ்ச நாள்ல மாதவன் கிட்ட இருந்து letter வந்துச்சு... அவனுக்கு பிஸினஸ்ல நல்ல லாபம் வர்றதாகவும், கம்பெனிய பெரிய அளவுல விரிவு படுத்திருக்கறதாகவும்... கூடிய சீக்கரம் அங்க எல்லாரையும் பார்க்க வர்றதாகவும் எழுதியிருந்தான்...

அப்பையும் நம்ம நிலைமை ஒண்ணும் முன்னேறல... உங்க பெரிய அத்தைக்கு ரெண்டு பெண் குழந்தைகளும், அடுத்தவளுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது...

குழந்தைகளுக்கு சீர் செய்ய அது இதுன்னு இன்னும் கடன் தான் கூடுச்சு... கடன்காரணுங்க வீட்டுப்படியேறி வட்டி கேக்கறளவு போய்டுச்சு... ரொம்ப கேவலமா இருந்துச்சு...

அப்பத்தான் தெய்வமா வந்து சேர்ந்தான் மாதவன்... ஏழு வயசு கௌஷிக்கையும், அவன் மனைவி ரஞ்சனியையும் கூட்டிக்கிட்டு...

வந்தவன் நம்ம நிலைமைய பார்த்துட்டு ஒரே கோபம், இத ஏன் என்னிடம் சொல்லல்ல ,அப்ப நீங்க என்னை உங்க பையன்னா நினைக்கல இல்ல அப்பிடின்னு ரொம்ப கோபப்பட்டான்...

அதுக்கு அடுத்த நாளே அங்க அவங்க அப்பா அவன் பங்குக்குன்னு கொடுத்த இரண்டேக்கராவையும் வித்து நம்மளோட பாதி கடன அடைச்சான்... நாங்க எவ்வளவு தடுத்தும் அவன் கேக்கல... நான் உங்க பையன்னு நினைச்சிங்கன்னா இத தடுக்காதீங்கன்னு சொல்லீட்டான்...

அதுமட்டுமில்லாம மிச்ச கடனுக்கு அவன் பொண்டாட்டி நகையெல்லாம் வித்து அடைச்சான்... அதுக்குக் கூட அவன் பொண்டாட்டி ஒரு வார்த்த கூட மறுத்துப் பேசால...

அப்பறம் நம்ம எல்லாரையும் மும்பைக்கே கூட்டிட்டு வந்து அவன் வீட்டிலேயே தங்க வைச்சான்... இங்க வந்தப்பறம் அவன் விலைக்கு வாங்கிருந்த புது வீட்ட வித்துட்டு அந்த பணத்துல ஒரு துணிமில்ல உங்க அப்பா ஆரம்பிக்க உதவினான்...

ஒரு வருஷம் அவன் வீட்டுல தான் இருந்தோம்... அப்போல்லாம் ரஞ்சனி முகம் சுளிக்காம எல்லார்கிட்டையும் பாசமா இருந்தா...கௌஷிக்க எப்படி கவனுச்சுக்கிட்டாளோ அப்படி தான் உன்னையும் அகிலனையும் பார்த்துப்பா...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now